Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஞானமடா நீயெனக்கு – 63

ஒவ்வொரு பெற்ற வயிறும் வளர்த்த தோளும் தன் குழந்தைக்கான அன்பையும் ஆசைகளையும் எழுதிவைக்க நாட்குறிப்பினை தேடுவதில்லை; தேடி வைத்திருந்தால் – ஒவ்வொரு வீட்டிலும் ஞானமடா நீயெனக்கும் – ஞானமடி நீயெனக்கும் – நிறைய கனத்திருக்கும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 62

உன் நெடுந்தூர பயணத்தில் உனை போல் ஒரு பூ – உன் வீட்டிலும் பூக்கும்; அன்று – அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில் ஒன்றிலாவது நிறைந்திருக்கும் – நானுனக்கு கொடுக்கும் நிறைய முத்தங்களின் அன்பு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

61 குழந்தைகள் காணும் உலகம் புதிது; கவனம் கொள்க!!

அடுப்பு எரிகிறது.. நான் வெளியே கூவிச் சென்ற கீரைகாரரிடம் கீரை வாங்க வாசல் நோக்கி போகிறேன் நீ அடுப்பினை பார்க்கிறாய்.. அடுப்பில் நெருப்பு சிவப்பாக கனன்று எரிகிறது உனக்கு நெருப்பு அதிபுதிது முதன் முதலாக இன்றுதான் அடுப்பின் சிவந்த – நெருப்புத் துண்டுகளை பார்க்கிறாய், நெருப்பு சிவக்க சிவக்க – நெருப்பின் மேல் உனக்கு ஆசை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சாபத்தின் விடிவு; பெரியார்!!

கடவுள் பெயரில் அழிந்த மனிதத்தை மீட்டு; மூடத்தை யொழித்த பெரியார்! கருந்தாடி நரைப்பதற்குள் – ஒரு காலத்தையே மாற்றிப்போட்ட பெரியார்! என் தம்பிகளின் காலத்தில் – ஜாதிமதமற்று வாழ என் தாத்தா காலத்திலேயே வழிசொன்ன பெரியார்! கடவுளர்களைக் காக்க கடவுளை பழித்து ஜாதியில் அறுந்த இதயங்களை – காதலால் இணைத்து வாழ்வினை போதித்த பெரியார்! காலச் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

17 ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி!

மாலதி வீரவணக்க நாள் – அக்டோபர் 10 எம் விடுதலை போருக்கு நாங்கள் கொடுத்த கொடை – எம் மண்ணின் வீரம் வரலாற்றில் நிலைக்க விதைத்த முதல் தாய்விதை; மாலதி! பெண்ணின் வீரம் இதுவென்று சமரில் காட்டிய முதல் பெண்புலி; விடுதலைக்கு கனவு சுமந்தோர் மத்தியில் – களத்தில் இறங்கி உயிரை கசக்கியெறிந்த போராளி; மாலதி! … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்