Category Archives: கவிதைகள்

கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 2

நான் வரும்போதெல்லாம் உனக்காக ஒரு மலர் வாங்கி வருவேன் நீ எனைக் கண்டிராத இடத்தில் அந்த மலர்களை விட்டுச் செல்வேன் மலர்களை தாண்டிச் செல்வாய் நீ, உனக்கந்த மலர்கள் அழுவதாக சத்தம் கேட்டிருக்கும் போல்; நீ திரும்பிப் பார்ப்பாய், சற்று தூரம் சென்று மீண்டும் மீண்டும் அந்த மலர்களைப் பார்த்தவாறே போவாய்.. மலர்களும் மெல்ல அழத்துவங்கும்.. … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 1

இதோ.. இப்போதுதான் நீ இங்கிருந்துச் செல்கிறாய், வேறென்ன செய்ய நான்வந்த கால்தடத்தையும் உனக்கென விட்டுச்செல்கிறேன், நாளை இங்கு மழை வரலாம் காற்று வீசலாம் காலங்களும் மாறிப்போகலாம், நமக்கு மட்டும் நீ அங்கு இருந்ததாகவும் நான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை நம் மனதிரண்டும் – சுமந்துக்கொண்டே திரியும்… மூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள் மோகினி … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

அஞ்சறைப் பெட்டியின் வாசத்தில் அழகழகாய் பிள்ளைகளைச் செய்தவள் நீ; அடுக்குமாடிக் கட்டிடத்தின் இடுக்கிலும் கனவுகளை வண்ணமாய் நெய்தவள் நீ, நெஞ்சுக்குழி படபடப்பில் வயது நாற்பதை நான்காகக் குறைத்துக்கொள்பவளே; இதோ நீயில்லா தெருக்களில் விளக்குகள் இருக்கிறது வெளிச்சமில்லை, உனைக் காணாத வீட்டினுள் வெளிச்சமுண்டு இருட்டை என்னால் அகற்றவே முடிவதில்லை, நஞ்சு கலக்காத மரணத்தில் மெல்ல மெல்ல மூழ்கடிக்கிறாய் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

              நீ கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது நான் கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது ஆனால் – நீ கொடுப்பது மட்டுமே முத்தமாகிறது.. —————————————– வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

                    ஒரு சன்னமான ஒளியில் உனைச் சந்திக்க ஆசை இருட்டில் உனைக் கட்டிக்கொள்ள அல்ல, அந்த சன்னமான ஒளி பற்றிப் பேச.. ———————————————- வித்யாசாகர்