Category Archives: கவிதைகள்

ஞானமடா நீயெனக்கு – 28

என் துணிகளெல்லாம் பழசானால் – கரிகந்தை என்பதில் யாருக்குமே சந்தேகம் இராது; ஆனால் – உன் துணிகள் உனக்கு சிறுத்து விட்டாலும் அதை கையில் தூக்கி நிறுத்திப் பார்த்தால் என்றைக்குமே நீ அதில் – தெரிவாயடா!!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 27

நீ பிறந்த தேதி உனக்கு பெயர் வைத்து உன்னை முதன் முதலாய் அழைத்த நாள், நீ முழுச் சட்டை போட்டது காலூன்றி நடந்தது சப்தம் எழுப்பி பார்த்தது அம்மா என்று அழைத்தது அப்பா என்று அழைத்த குரல் உயிர் வரை உள்சென்றது – இன்னும் எத்தனை எத்தனை எத்தனை??? அத்தனையும் – உனக்கான இடத்தில் பத்திரமாக … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45 முடிவல்ல – ஈழம்!

முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல – ஈழம்! காற்றின் அசைவுகளில் ஏக்கமாகப் படிந்த கறையது ஈழ விடுதலை; ஈழவரலாற்றில் ரத்தத்தால் தொய்ந்த பகுதி முள்ளிவாய்க்கால்! அழகிய ஆனந்தபுரத்தை சுடுகாடாக்கி – சமாதியின்றி பல போராளிகளை செய்திக்கு – மரணப் படையலிட்ட பெருந் துயரம் முள்ளிவாய்க்கால்! சதைகிழிந்து உறுப்புகள் சிதறி உடல் துண்டிக்கப் பட்டு அரை உயிரில் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 71

விழுகின்ற ஒரு சொட்டுக் கண்ணீருக்குத் தான் வருடங்களிரண்டின் வருத்தம் புரியும்; உன்னை காணமல் – பேசாமல் -தொடாமல் – தவிக்கும் வாழ்க்கைக்கு தான் நொடியில் கூட நான் இறப்பது தெரியும்! தொடத் தொட உன் தேகமினிப்பது – கனவிலும் நினைவிலும் மட்டுமென யாருக்குத் தெரியும்; பட படவென உடையும் இதயம் தானிங்கே..’கவிதையென்பது’ உனக்கும் எனக்கும் இடையே … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

44 துர்க்கா என்றொரு தாயுமானவள்!

உறவோடு உயிர்வளர்க்கும் பெண்மையை உதறிவிட்டு – எம் உறவிற்காய் உயிர்தந்த தாயுமானவளே, அடுப்பெரிக்கும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்றோருக்கு முன் – அடித்து போர் புரிந்து ஈழ விடுதலை நெருப்பிற்கு தன்னையே தரித்தவளே; பெண்படைக்கு ஆண்படை அஞ்சுமளவு எம்படை – எவரையும் வெல்ல ஒரு தனிப்படையையே தேற்றியவளே; காலம் காலமாய் யாரேனும் வந்து எமக்கென்று ஒரு தேசம் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்