Category Archives: கவியரங்க தலைமையும் கவிதைகளும்

உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!

காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி ஏறிநடந்த தூர அளவிற்கு வந்து விழுந்த சில்லறையில் – ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா? கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில் என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும் பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம் வீட்டில் கொண்டாட இயலுமா? பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி)

அன்றைய கவியரங்கத்தில் வாசித்தோர் எல்லோருமே மிக அருமையாக வாசித்தனர். என்னைவிட சிறப்பாகவும் கருத்தாழமாகவும் வாசித்தனர் என்று கூட சொல்லலாம். அதிலும், கவிஞர் திரு. யுகபாரதி அவர்களின் தலைமை நன்றிக்குரிய தலைமை. தன் யதார்த்தம் கெடாது மிக நட்போடும் அன்பு கலந்தும் அவரோடிருந்த அந்த சில நாட்கள் மனதின் இனிமைக்குரிய நாட்களே. பின்னனி பாடகி அன்பு சகோதரி … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை!!

சொல்லும் பொருளும் அரசாலும் எம் சந்தக் கவியும் ஜதிபாடும், உள்ளும் புறமும் அழகாகும் தமிழ் எங்கும் எதிலும் முதலாகும், மொழியும் உயிரும் ஒன்றாகும் அதிலும் தமிழே சிறப்பாகும்.., கம்ப நாத கவிமலரே.. கடல் காற்று வானமென கலந்த தமிழழகே; என் உச்சுமுதல் நிறைந்தவளே நாவில் இனிக்கும் தமிழே முதல் வணக்கம்! பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும் தோழமை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

அமோகமாக நடந்தேறியது ‘குவைத் கவிஞர் சங்கத்தின் தேனிசை திருவிழா..

தமிழ்மொழி அக்கறை, தமிழர் ஆரோக்கியம், தமிழினத்தின் வளர்ச்சி சார்ந்த வாழ்வியல் மாற்றங்கள் என பங்காற்ற வேண்டிய இடங்களிலெல்லாம் மௌனித்து, முழு ஈடுபாடு காட்ட திராணியின்றி அவைகளை வார்த்தையால் மென்று, தனை வளர்த்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில்; தெருக்கள் பல சுற்றி தமிழர்களை திரட்டி, வசதியான வீடுகளை தட்டி, அவர்களின் உள்ளத்தின் ஈரத்திலிருந்து விழாக்களின் மூலாதாரத்தை பெற்று, … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

குவைத்தில், தீபாவளியை முன்னிட்டு சிறப்புக் கவியரங்கம்..

பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும் தோழமை பூத்திருக்கும் கவிச் சபைக்கும் முதல் வணக்கம், வானத்தில் பூ பூத்து அன்பில் நட்பாய் காய் காய்த்து வார்த்தையில் எளிமை கூட்டி பேசுகையில் இதயக் கூடெங்கும் என் தமிழ்போல் நிறையும் அன்பு தலைமை ஐயா சிவமணிக்கும் வணக்கம்! என் கவிதை சற்று சோகம் கூட்டலாம்; ஆனால் காரணம் நானல்ல எனக்கு தலைப்புக் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்