Category Archives: வாழ்த்துக்கள்!

இதயத்தில் இடம் கொண்டும் கொடுத்தும் போனவர்களுக்கு எழுதிய வாழ்த்து பாக்கள்!

அவள் நகம் கடித்து பசியாறு!!

இன்று (10.09.2010) காலை 7.30 ~ 9.00 மணியளவில், தாயகத்தில், நன்றே நடந்துமுடிந்த திருமணத்தை முன்னிட்டு ‘சகோதரன் சுரேஷ் மாசிலாமணி, சகோதரி தேவிபாலா சுரேஷ் தம்பதியருக்கு’ இவ்வாழ்த்துக்கள் கவிதையினால் நிறைகிறது!! ———————-***————————- அவள் நகம் கடித்து பசியாறு கதை பேசி நாட்கள் கட காதலித்து வருடங்களை குடி கண்ணியமாய் வாழ்ந்து முடி! சிறு பிரிவுக்கும் வருத்தம் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கண்ணியப் பெருநாள்; ரமலான் திருநாள்!!

உள்ளிருக்கும் சிரிப்பை வெளியே கொணரும் ரமலான்; மனதிற்குள் நிறைந்துள்ள தெய்வீகத்தை முகத்தில் காண்பிக்கும் ரமலான்! முப்பது நாள் நோன்புதனில் – ஏழையின் பசியினை போதிக்கும் ரமலான்; ஐந்து வேலை தொழுகையில் – மனித ஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலான்! இல்லாது உண்ணாததை விடுத்து – எல்லாம் இருந்தும் உண்ணாமையில் ‘தீரம் தரும் ரமலான்; நினைப்பதை நடத்தும் உறுதியை … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

அனைத்து; உயிர் சுமந்த நட்புறவிற்கும் – வித்யாசாகர்!

காதலின் காதலை பகிர்ந்தும் காதலை கலக்காத நட்பில், அண்ணன் தங்கை ராக்கி கட்டாத நட்பில் இறுகிய மனதில்; சற்று அதிர்ந்து பேசியதற்கு கூட பிறகுவருந்தி தோளனைத்துக்கொண்ட பண்பில், உதவிக்கு முன்னிலாவிட்டாலும் ஆபத்தில் பின்னிற்க இயலாத நெருக்கத்தில்; வாழ்வின் சுவரெல்லாம் இதயத்தின் பலமாக பூசிய உறவில், உயிர் பதிக்கும் அன்பின் நகரும் தெருவெலாம் நட்பு நட்பு நட்பென்றே … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

அன்பு தம்பி விஜய ரூபனுக்கு வாழ்த்து!

மனசார அன்பை விதவிதச்சி என் மனசெல்லாம் விதைச்ச தம்பி, கவிதை படிச்ச அன்பால உடன் பிறக்காமல் உற்ற தம்பி; வானம் போல மனசால ஞானம் – கூட நிரஞ்ச தம்பி, இனம் காக்கும் உணர்வுள்ள எழுச்சிக் குறையா நல்ல தம்பி; இணையத் தாய் கொடுத்த உறவில் ஈழ மண்ணை போற்றும் தம்பி என் இனம் காக்க … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கவிஞர் மன்னார் அமுதனுக்கு திருமண வாழ்த்து!

                  ஆஹா…. கண்கொள்ளா காட்சி.. கவிதைக்கு – கவிதையோடு திருமணம்..   எழுதுகோல் பிடித்த விரல்களுக்கு  சிரிப்பென்னும் மோதிரம்..   அன்பு தாங்கிய மனதிற்கு ஆரணங்கு பரிசு..   தமிழ் போற்றும் புலமைக்கு தமிழச்சி துணையாக..   சமூகம் சுமந்த புத்திக்கு இல்லற வரவேற்பு..   நல்லறம் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்