Category Archives: விடுதலையின் சப்தம்

என் வலிக்களின் வடுக்கள்..

30 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

பசுமை வளர்த்த இனம் – பிறப்பு இறப்பு பதிவின்றி பிணங்களாய் குவிந்தது வரலாற்றில்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

29 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

மயான கிடங்காய் நீண்டது – முல்லைவாய்க்கால், வெறும் செய்தியாக மட்டுமே – காண்பிக்கப் பட்டது தமிழரின் மரணம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

28 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

ஈழத்தின் வருடங்களை கடந்த இருட்டு, ஜெயிப்போ தோற்ப்போ என்பதான பயம், இரண்டிலொன்றை பார்ப்போமென்ற நம்பிக்கை.. எதையுமே பார்க்கவில்லை சிங்களன் வீசிய நச்சுகுண்டு; நியாயத்தை விழுங்கிக் கொண்டதில் நச்சு – பிணங்களாய் கொப்பளித்தன!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

27 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

முல்லைவாய்க்கால் பகுதியில் வீட்டிற்கு வீடு ஒருவர் போரில் மரணம். வீட்டின் – அத்தனை பேரும் சிங்களன் வீசிய நச்சு குண்டிற்கு நரபலி தகனம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

26 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

விடுதலை என்னும் ஒற்றை வார்த்தைக்கு எத்தனை மரணம்? எத்தனையோ மரணங்கள் நேர்ந்த பின்னும் சிங்கள குண்டுவெடி சப்தத்தில் கேட்கவேயில்லை விடுதலை என்னும் ஒற்றை சொல்!!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 4 பின்னூட்டங்கள்