கற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி)

ன்றைய கவியரங்கத்தில் வாசித்தோர் எல்லோருமே மிக அருமையாக வாசித்தனர். என்னைவிட சிறப்பாகவும் கருத்தாழமாகவும் வாசித்தனர் என்று கூட சொல்லலாம். அதிலும், கவிஞர் திரு. யுகபாரதி அவர்களின் தலைமை நன்றிக்குரிய தலைமை. தன் யதார்த்தம் கெடாது மிக நட்போடும் அன்பு கலந்தும் அவரோடிருந்த அந்த சில நாட்கள் மனதின் இனிமைக்குரிய நாட்களே. பின்னனி பாடகி அன்பு சகோதரி திருமதி. சின்னப் பொண்ணு அம்மா, இசையமைப்பாளர் சகோதரர் திரு. ஆதி என எல்லோருமே தன் உறவு போல வளம் வந்தார்கள் இவ்விழா நடந்திருந்த ஓரிரு நாட்களில்.

மொத்தத்தில் நன்றிக்குரியவர் விழா ஏற்பாடு செய்திருந்த சேது ஐயா என்றாலும், ஒளிஒலி பதிவு செய்த ஜெஸ்ஸி வீடியோ சகோதரர் சலாம் மற்றும் ஒலி எழுப்பி உதவிய சகோதரர் ஏசுரத்தினம் ஆகியோரும் பெருத்த நன்றிக்குரியவர்களே..

வித்யாசாகர்

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

39) மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..

குருதி வடிக்கும் கண்களின்
வருத்தம் புரியா உலகமிது;
நின்று யோசித்து நிமிர்கையில் – காலம்
அதோ எங்கோ போகிறதே….!!

சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு
ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா?
சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம்
பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ?

சொல்லி அடித்த பரம்பரைதான்
புது ரத்தம் தேடி – அலைகிறதோ;
உயிர் செத்து மடிந்த சேதி கேட்டும்
சுடும் கோபம் விடுத்து மரமானதுவோ?!!

யோ; மரம் கூட ஆயுதமானது
இந்த மனிதர் ஏனோ மனிதமிழந்தார்,
கோபம் துறந்தார், குழந்தை கண்கீறி ‘கிழவி உடல் அறுத்தும்
எல்லாம் சகித்தாரே????????!!!!!!!!!!!!!!!

றையே!!!!!! இதில் ஏனோ நீயும் குருடானாய்
நீ இல்லையென்று முழங்கவும் இச்செயலால் ஆளானாய்
உனை வாரி இறைத்து மண்ணென சொல்லுது மனமும்
உன் கால் பிடித்தே அழுகிறது தினமும்;

ருப்பு ஜூலை, கீழ் வெண்மணி அவலம்
செஞ்சோலை கொடூரம், முள்ளிவாய்க்கால் படுகொலை
மாவீரர்களின் நினைவு நாட்கள் என இன்னும்
எத்தனை எத்தனை கருப்பு நினைவுகளில்; வாழத் தகுமோ அம்மக்கள்??!!

லகெல்லாம் செய்தியாகி, கொஞ்சம் உணர்வு பொங்கி கவிதையாகி
இத்தனை பேர் மாண்டார்கள், இப்படி ஓர் துயிலம் அழிக்கப் பட்டது
இப்படி ஒரு கொடூரன் இருந்தான் என்று வரலாறு சொல்ல மட்டுமே
இத்தனை உயிர்களின் பலியும், காலம் சுமந்த போராட்டமுமா????

ல்லை இல்லை; காலத்தின் கண் மூடப் படவில்லை
அநீதிக்கான இயற்கையின் தண்டனை கிடைத்தே தீரும்,
கடவுள்; அம்மக்களின் விடுதலை தேசத்து நிம்மதியில்
கண் திறப்பார்’ எனில் – நானும் நம்புகிறேன், ஈழம் மலரும்!!
———————————————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

38) இது விடுதலைக்கான தீ……..

1
பேச வாயற்று போன இடத்திலிருந்தே
வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன;

விழுகின்ற வார்த்தையினால்
கொதிக்கும் ரத்தத்தில் தான் –
மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!!
—————————————————————–

2
நா
ம் அணியும்
ஒவ்வொரு சட்டைக்குள்ளும்
நம்மை காக்கும் – மானமும் இருக்குமெனில்

அதற்குள் –
விடுதலையும் இருக்கும்!!
—————————————————————–

3
வெ
ள்ளைக் கொடியில்
விடுதலை எல்லாம் –
இனி வெற்று வாய்க்கு
மெல்ல வெற்றிலை போல்;

உடல் கீறி ஒழுகும்
ரத்தம் நனைத்தேனும்
சிவக்கட்டும் – இனி வெள்ளைக்கொடி!!
—————————————————————–

4
ன் கையில்
நூறு கத்தி கொடுத்து
யாரையேனும் வெட்ட சொல்;
வெட்ட மாட்டேன்.

என் தமிழச்சியை தொட்டால்
கத்தியின்றி
ரத்தமின்றி
வெட்டுவேன்!!

நான் வெட்டிய வலியில்
விடுதலை பிறக்கும்,
விடுதலையை கவிதைகளும் வெல்லும்!!
———————————————-

5
தயத்தை மிதித்துக் கொண்டு
மார்பை ரசித்தவனை –
வெட்டிப் போடாவிட்டாலும்

ஒட்டி வாழாமலுக்கேனும் –
விடுதலை வேண்டும்!!
—————————————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6) ஒரு குடைக்குள் வா உலக தமிழினமே..(GTV காணொளி)

னியே நிற்கும் ஒருவனை இன்னொருவன் வந்து தள்ளிப் பார்த்தால் தனியே நின்றவன் ஏனென்றேனும் நிச்சயம் கேட்பான். பத்து பேர் வந்து தள்ளினால் முறைக்கவேனும் செய்வான். நூறு பேர் வந்து தள்ளினால் மானஸ்தனுக்கு கோபமேனும் வரும். ஆயிரம் அல்ல லட்சம் பேர் வந்து சீன்டினாலும் ஒருவனையேனும் திருப்பி அடிப்பான் தமிழன்.

அந்த வீரத்தை மீட்டு கையில் வைத்திருப்போம். யாரை அடிக்கவும் அல்ல, நம்மை யாரும் அடிக்காமல் காத்துக் கொள்ள..

வித்யாசாகர்

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

5) விடுதலையின் வெள்ளை தீ’ (GTV-யில் ஒலிபரப்பிய நம் கவிதை)

சொல்லி முடியா அர்ப்பணத்தின் வரலாறில் ஒரு பக்கமேனும் இக் கவிதை பகிர்ந்துள்ளதா தெரியாவிலை.

எனினும், கண்ணுக்கெதிரே சண்டையிடும் தர்மந்தனை கவ்வும் நரமனிதர்களை ஒன்றுமே செய்ய இயலாமல் நிற்கும் மரம்போல, எம் தியாக தீபங்கள் சாய்கையிலே மரமாய் நின்று; வெறும் காட்சியாய் கண்டு; எரிந்து போன கண்களின் ரத்தமாய் சொட்டிய கண்ணீர் துளிகள் இங்கே கவிதைகளாய்.. கவிதைகளாய் மட்டுமேனும்…

வித்யாசாகர்

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்