41) என் எல்லாமாய் ஆனவளே…

மினுக்கும் தங்கத்தில்
சிணுங்கி பிறந்தவளோ,
ஒரு சிங்கார சிரிப்பிற்குள்
எனை உயிரோடு கொள்பவளோ;

டக்கும் பொழுதெல்லாம்
எனை காதலால் குடிப்பவளோ,
ஒரு கையளவு மனசாலே –
எனை காலத்திற்கும் சுமப்பவளோ;

தொடும் காற்றோ;
தொடாது சிலிர்க்கும் பூவிதழோ,
உள்புகும் ஆசை நெருப்போ –
உயிர்வரை பதிபவளோ;

ணர்வுகடலில் உயிர்த்தெழுந்த
ஒற்றை பாடலின் ரெட்டை அர்த்தமோ;
எதுவாகியும் –
எனக்காய் வாழ்பவளோ;

டலோர மணற்பரப்பாய்
மனசெல்லாம் நிறைந்தவளோ,
நான் தொட்டிடாத ஒரு கணத்தில் –
கவிதையாய் சிலிர்ப்பவளோ;

டைத்தெரு நடக்காமல்
முகத்தில் தாவணி வீசிய புன்னகையோ,
கனவுகளுக்குள் புகுந்து பகலை –
இருட்டிற்குள் தொலைப்பவளோ;

காற்றிடம் பேசி எனை
தென்றலாய் தரிப்ப்பவளோ
நதியிடம் சொல்லிக் காதலை –
இதயக் கடலுக்குள் கரைப்பவளோ;

னசெல்லாம் பல் தைத்து
ஒரு ஓரப் பார்வையில் தின்பாளோ,
ஒரேயொரு யுத்தம் செய்தேனும் –
என்னை ஏழுபிறப்பிற்கும் கொள்வாளோ;

தென்றலோ; நிலவோ; மலரோ;
எல்லாம் கடந்தவளோ நீ;
இவை ஏதுமற்ற காதலியோ –
எனக்கே எனக்காய் பிறந்த நீ – என் எல்லாமாய் ஆனவளோ!!
———————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே!!

னை கொஞ்சும் ஒரு சிரிப்பு செய்து
இக்கடிதத்தில் கோர்த்திடவா;
நீ அழயிருக்கும் கண்ணீரை –
கோடி; விலைவைத்தேனும் வாங்கிடவா!

நீ வெல்லும் ஒரு சபைக்கு
நான் காலதவம் செய்திடவா;
நீ செய்த ஒரு தவரிருப்பின் –
அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா!

நீ சொல்லுமொருக் கட்டளையில்
இவ்வுலகை மாற்றி போட்டிடவா;
நீ சென்று பார்க்கும் தெருமுனையில் –
நான் மறுமுனையாய் கிடந்திடவா!

னை காணும் அந்த பொழுதிற்கே
என் ஒற்றைபிறப்பை விற்றிடவா;
நீ பேச இயலா நாட்களிலே –
நான் காற்றிலாக உயிர் கரைத்திடவா!

ன் பிறந்தபலன் எல்லாமெடுத்து
உன் ஆசைகளைப் பூர்த்தி செய்திடவா;
கடவுள் ஒன்று உண்டென்றால் –
உன் கனவை ஜெயிக்க கேட்டிடவா!

ப்படி நீளும் மடலில் கைகுவித்து
கவிதை பூக்க வாழ்த்திடவா;
நீ நீண்டூ வாழும் வாழ்க்கைக்கு –
வளமும்  நலமும் கூட்டிடவா;

ம்மா அண்ணன் அண்ணிகளோடு
நட்பும் நானும் குழந்தைகளும்
தம்பியும் தங்கையுமாய் பார் சூழ –
நீ வாழ்வாங்கு வாழ வாழ்த்துவமே!!
———————————————————————

ப்பசி 12 – இல் பிறந்த செல்லத் தம்பி விஷ்வாவிற்கும்
கார்த்திகை  15 – இல் பிறந்த இனிய சகோதரி யமுனா பாலாவிற்கும்
மார்கழி 1 (16.12.2010)- இல் பிறந்த அன்புத் தம்பி பாலாவிற்கும்
———————————————————————

ங்களின்  அன்பு குறையாத வாழ்த்துக்கள்
என்றென்றும் நிறையட்டும்!!
———————————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே!!

ச்சிவெயில் எனை எரிக்கும் சூட்டை
உன் ஒற்றை பார்வை தனித்ததடி
நாளையும் வந்து இங்கே நிற்பேன் –
நீ வந்தால் வாழ்க்கை சொர்கமடி!

சற்று களைந்து சிலிர்ப்பும் உன் அடர்கூந்தல்
காற்றில் பறக்கும் என் இதயமடி –
காடு போல் பரந்துகிடக்கும் என் இதயதெருவில்
நீ மட்டுமே வீற்றிருக்கும் தேவியடி!

நெற்றி சுருக்கி நீ பார்த்தாய் பார்த்தாய்
ஆகா.. உள்ளே ஒரு பிரபஞ்சம் உடைந்ததை கண்டேனடி
இனி ஏழு பிறப்பு உண்டோ இல்லையோ
உனக்காய் உனக்காய் மட்டுமே நான் பிறப்பேனடி!

நடந்து வரும் தேவதை போல் – நீ
கை வீசி வீசி காற்றில் கலந்தாயடி
என் சுவாசம் பிரித்து பார்த்தால் கூட
அதில் உயிர்காற்றாய் நீயே இருப்பாயடி!

எனை தொடாத தென்றல் நீயே
தொட்டுசெல் ஓர்முறை – இதய தாளத்தில் ஆடி திளைப்பேனடி
விட்டுசெல்லும் ஓர் முடிவு – உண்டென்றால்
அதை சொல்லாமலே செல் –

உன் ஒற்றை பார்வையிலேயே உயிர்த்துக் கிடப்பேனடி!!
—————————————————————
வித்யாசாகர்

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

38 அம்மாயெனும் தூரிகையே..

ன் வாழ்வின் ஓவியத்தை
வரையும் தூரிகையே –
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்
அழகுடன் மின்னுபவன் நான்;

பாட்டின் ஜதிபோல
எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன்
அசைவில் மட்டுமே அசைந்து –
நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;

டைபாதையின் முட்களை மிதித்து – என்
கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே
உன் அன்பிற்கு – அன்றும் இன்றும்
நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!

ண்மையில், காற்றின் சப்தத்தை
இசையாக்கிக் கொடுத்த ஒரு
யாழின் பெருமை –
உன்னையே சாரும் அம்மா!

னியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்
இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்
நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு
நான் – உனக்கு மட்டுமே பிள்ளையாக – பிறப்பேனம்மா!!
————————————————————————
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

56,அரைகுடத்தின் நீரலைகள்..

1 இரவின் சுவர்களில் வண்ணமின்றி – எழுதப் படுகின்றன நம் கனவுகள்.. எவனோ ஒருவன் வெறும் – இருட்டென்று சொல்லிவிட்டுப் போகிறானதை.. ————————————————————– 2 ஆம்; நிறையப் பேர் அப்படித் தான் இருக்கிறார்கள், நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ அப்படி; காரணம் நாமும் – அப்படியென்பதால்!! ————————————————————– 3 நட்பினால் – பெரிய தேச மாற்றம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்