குவைத்தில் செந்தமிழ் கலைவிழா!!

அன்புடையீர் வணக்கம்,

ரு கால தவம்; நிகழ்வின் வெற்றிகளில் பூரிக்கிறது. அப்படி வெற்றி கொப்பளிக்கும் ஒரு தினத்தை நோக்கி விழா எடுக்கிறது ‘குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், ஐயா திரு. செம்பொன் மாரி. கா சேதுவின் தலைமையில்.

கவிஞர் திரு. யுகபாரதியின் தலைமையில் ‘கற்பனை மட்டுமல்ல கவிதை’ எனும் கவியரங்கமும், கிராமிய பாடகி திருமதி. சின்னப் பொண்ணுவின் தலைமையில் வ.வா.க.ச மற்றும் சங்கமம் குழுவினரின் ஆடல் பாடல்களும், மேகமாய் திரைப்பட இசையமைப்பாளர் திரு.ஆதி அவர்களின் தலைமையில் நிகழ்த்துக் கலையும் என, நம்மை தமிழர் சார்ந்த கொண்டாட்டங்களாக குதூகலப் படுத்தவிருக்கும் ‘இப்பெரு விழா சிறப்புடன் நடைபெற, தோழமை கொண்டு அனைவரும் பங்கேற்று, நிகழ்ச்சியினை சிறப்பித்துத் தருமாறு வேண்டி, எங்களின் மனம் நிறைந்த வரவேற்பிணை நவில்வதில் பெருமை கொள்கிறோம்.

நாள் : 19.11.2010, வெள்ளிக் கிழமை, துவக்கம் – 5.30 மாலை
இடம் : அமேரிக்கா சர்வதேச பாடசாலை, சால்மியா, குவைத்
தொடர்புகளுக்கு – 00965 – 67077302

நன்றிகளுடன்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

46 அரைகுடத்தின் நீரலைகள்..

ங்கத்தின் மினுக்களில்
வியர்வையின் வாசத்தில்
வேறுபாடும் மனிதர்களை
ஒன்று சேர்க்கிறது கவிதை;

அதையும் பிரித்தே பார்க்கிறான்
மனிதன்!!
————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45 அரைகுடத்தின் நீரலைகள்..

பெருச்ச்ச்ச்சா
வாய்கிழிய ஏதாவது
பேசுவோம்;
முகத்திரை கிழிபடாத நம்
தவறுகளின்
சுவட்டின் மீது நின்று!!
——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

44 அரைகுடத்தின் நீரலைகள்..

நானும் என் தம்பியும்
தெருவில் நடக்கிறோம்
அவன் எதிரே வரும் போகும் பெண்களை
திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வருகிறான்
ஐயோ இப்படிப் பார்கிறானே என்று
உள்ளே சற்று வலிக்கையில் –
என் சபலமும்; எனை காரி உமிழ்ந்தது!
————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

43 அரைகுடத்தின் நீரலைகள்..

ன் தவறுகளுக்கு
தண்டனையாக
தோல்வி வேண்டாம்;
வேண்டுமெனில் –
மரணம் கிடைக்கட்டும்!
——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக