42 அரைகுடத்தின் நீரலைகள்..

வாசலில் பூத்த
மலர்களில்;
நிறைய மலர்கள்
எனக்கானதல்ல!!
———————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

41 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

வாழ்வின் சுவர்களில்
கொட்டை எழுத்தில்
எழுதப் படுகிறது மரணம்;

படிக்க மட்டுமே நாளாகிறது!
————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

40 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

த்தனையோ பேரின் மரணத்தில்
நிகழ்வதில்லை பாடம்;

என் வீட்டின் ஒரு சின்ன மரணம்
மாற்றி விடுகிறது என் பாதையையும்
வாழ்க்கையையும்,

வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில்
பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில்
நிகழ்கிறது – தனக்கான மரணம்!
———————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

39 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

யாரும் பயந்துவிடாதீர்கள்
பயம் கொள்வதால்
விட்டாசெல்கிறது மரணம்?

விட்டு செல்லுங்கள் மரணத்தை
துணிவிருந்தால் வந்து நம்மை
பெற்றுக் கொள்ளட்டும் மரணம்;

பெறாத மரணத்தில்
எனக்கென்னவோ வாழ்வதாகவே
தெரியவில்லை –
நிறைய பேரின் வாழ்க்கை!
———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

38 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

ன்ன தான் மனிதன்
செய்தாலும் – மனிதனை
செத்து தொலை என்று
சொல்ல விடுவதேயில்லை மரணம்;

மீறி சிலர் சொல்கிறார்கள்
ஏன்; கொலை கூட செய்கிறார்கள்
மனிதரற்றோர்;

மரணம் அவர்களை
மன்னிப்பதேயில்லை, மாறாக
தினம் தினம் கொள்கிறது,

கடைசி ஓர்நாளில்
அவர்கள் சடலம் மட்டும் எரிக்கவோ புதைக்கவோ
தூக்கி எங்கேனும் வீசவோ செய்யப் படும் நாளில்
அவர்களை இறந்ததாக –
கருதி மட்டுமே கொள்கிறது (அவர்களின்) உடல்!
—————————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக