அன்புள்ளங்களுக்கு வணக்கம்,
ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம்.
இசையமைத்து பாடியது :
பிரபல இசைமைப்பாளர் ‘திரையிசை தென்றல் ஆதி‘
பாடல் வரிகள்: வித்யாசாகர்
பல்லவி
ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!
சரணம் – 1
ஒரு தலைமுறைய தொலைத்துவிட்டு
நாட்டை தேடுறோம் –
நாடோடி போல ஓடி ஒண்டி கிடக்கிறோம்,
தமிழன்; ஆண்ட கதை மண்ணில் போச்சி
வென்ற ரத்தம் சுண்டி போச்சி –
பிரிந்து பிரிந்து இருப்பதால் வாழ்க்கை கூட தோல்வியாச்சி……..
ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!
சரணம் – 2
வாழ்க்கைக்கொரு நீதி வேணும்
போருக்கொரு நீதி வேணும்
நீதியின்றி கொன்றவனை ‘நீதி நின்று கொள்ளுமே,
எம் தமிழர் சாதி என்றைக்குமாய் காலம் வெல்லுமே;
ஆண்டாண்டா அழுத மண்ணில் அமைதி கொடிகள் பறக்கட்டும்
எங்கள் குழந்தையெல்லாம் சிரித்து சிரித்து பூத்து குலுங்கட்டும்
வீரமறவர் துயிலம் சென்று – தீபமேற்றட்டும்!!
ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!
சரணம் – 3
கனவுகளை சேகரிப்போம்
காடுபோல கூடி நிற்போம்
விடுதலையை வென்றெடுப்போம்
பட்ட அடியில் பாடம் கற்று – அடிமை வாழ்வை தகர்த்தெறிவோம்;
சமத்துவத்தை சொல்லி –
தமிழர் பண்பில் மிஞ்சி
எதிரி கூட எஞ்சி வாழ சீர் திருத்தம் போதிப்போம்
தோல்வி விரட்டி; வீரம் செறிந்து; வெற்றி வெற்றியென்று பாடுவோம்!!
ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!
—————————————————————————————
வித்யாசாகர்


























