பெரிய மிராசுதார்
பிச்சைக்காரன்
ஆண்
பென்
சாமி
குடிகாரன்
திருடன்
நல்லவன்
கெட்டவன்
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்;
ஆனால் –
நெருங்கும் முன்
நன்றாக; பார்த்துக் கொள்கிறது!
————————————————————————————–
பெரிய மிராசுதார்
பிச்சைக்காரன்
ஆண்
பென்
சாமி
குடிகாரன்
திருடன்
நல்லவன்
கெட்டவன்
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்;
ஆனால் –
நெருங்கும் முன்
நன்றாக; பார்த்துக் கொள்கிறது!
————————————————————————————–
எத்தனைமுறை அழைத்தாலும்
என்ன தான் எழுதினாலும்
எழுதிக் கொண்டே இருக்கிறது
அம்மா பற்றி மனசு!
—————————————–
எனக்கொரு எழுதுகோலும்,
சில தாள்களும்,
மூன்று வேலையின் ஒன்றில்; ஒரு கிண்ணம் சோறும்,
அவ்வப்பொழுது குவளை தேநீரும் கொடுத்துவிட்டு –
வாழ்தலின் மீதமான –
அத்தனையையும் எடுத்துக் கொள் உலகினமே;
அந்த வாழ்தலில்
உனக்காகவும் பேசப் பட்டிருக்கிறோம்!
——————————————————————
என் தாத்தா பாட்டி சிரித்த சிரிப்பு
என் தம்பிகள் தங்கைகள் வளர்ந்த வளர்ப்பு
ஒரு புகைப்படமாக மட்டுமேனும்
மாட்டி வைக்கப் பட்டுதான் இருக்கிறது;
கூட்டு குடும்பத்தில்!
—————————————————————-
நேரில் இன்னும் அவர் இருப்பதாகவே
பொய் சொல்கின்றன சிலரின் மரணங்கள்;
சிலரின் மரணத்தை நம்புவதும்
ஏற்றுக் கொள்வதுமே இல்லை மனசு;
வேண்டுமெனில்
அழுபவரை பார்த்து
ஆறுதல் சொல்லிக் கொள்ளளாம் என்றாலும்
அவைகளை கடந்தும் வலிக்கிறது மனசு –
வாழ்தலின் கட்டாயத்தில்;
மரணமாயிற்றே!!! வேறென்ன செய்ய????!!
எழுதியும்; தீர மறுக்கிறதே; மரணம்!!
——————————————————–