பூமிக்கு எனை
தாரை வார்த்த புண்ணிய தளம் என்றும்,
அவளின் முந்தானை
எனக்கான முதல் கைக்குட்டை என்றும்’ சொல்லி நம் தாயை நம் கண்முன் காட்டிய நம் அன்பு சகோதரிக்கு நன்றி கூறி – அடுத்த தலைப்பான தந்தை கவிதைக்கு செல்வோம்!
————————————————————————————————
வேர்வைகளால் பூத்த மலரில்
நம்மை வாசமாய் கமழ செய்தவரே;
இரவுபகல் நமை நினைத்து
தெருவெல்லாம் பயந்து நடந்து
வாழ்வெல்லாம் போராடிய உன்னதமே; உன்னதமே;
உன் காலடி தூசிகள் கூட – என் வாழ்வின் அற்புதமே; யெனில் –
உனைப் பற்றி நானென்ன சொல்ல..
இதோ என் கவி வந்து சொல்வார் – வாருங்கள் – ஐயா
திரு. சாதிக் பாட்சா அவர்களே;
————————————————————————————————
ஐயாவை பற்றி ஒரு விஷயம் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் –
தன்னம்பிக்கைக்கு இனி நாம் இவரை மட்டுமே –
அடையாளம் காட்டுவோம்; காரணம் ஆரம்ப கட்டத்தில்
கவிதைக்குரிய ஒரு ஆர்வம் மட்டுமே வெளிப்பட்ட இவர் ஆற்றலில்
இன்று பீறிட்டெழும் பா..’க்கள் ஆச்சர்யம் தான்.
அன்று, தன் ஆர்வத்தை,
உள்ளே சிக்கிக் கொண்டு தவிக்கும் பல கவிதையின் வேரினை
‘பிடித்தெரிந்து படைப்பாக்க இவர் பட்ட அவஸ்த்தை வேறு;
இப்போது இவர் அள்ளி அள்ளி வீசும் கவிதைகளின் ஜாலம் வேறு;
மிக்க பிரம்மிப்பும் வாழ்த்துக்களும் ஐயா!!
————————————————————————————————
























