61 குழந்தைகள் காணும் உலகம் புதிது; கவனம் கொள்க!!

டுப்பு எரிகிறது..
நான் வெளியே கூவிச் சென்ற
கீரைகாரரிடம் கீரை வாங்க வாசல் நோக்கி போகிறேன்
நீ அடுப்பினை பார்க்கிறாய்..
அடுப்பில் நெருப்பு சிவப்பாக கனன்று எரிகிறது

உனக்கு நெருப்பு அதிபுதிது
முதன் முதலாக இன்றுதான் அடுப்பின் சிவந்த –
நெருப்புத் துண்டுகளை பார்க்கிறாய்,

நெருப்பு சிவக்க சிவக்க – நெருப்பின் மேல்
உனக்கு ஆசை வருகிறது
நெருப்புத் துண்டங்களை ஒரு தின்பண்டம் போல்
பார்க்கிறாய் நீ..

திரும்பி வெளியே இருந்து வரும் என்னையும்
பார்க்கிறாய்

நான் கீரைவாங்கி உள்ளே வருவதற்குள்
நீ என்ன நினைத்தாயோ ஓடி –
நெருப்பை அள்ளி வாயில் போட்டுக் கொள்ள எண்ணி
விரைகிறாய்

நான் பதறி உன் அருகில் வருவதை கண்டு நீ
எங்கு நான் அந்து உனை தடுத்துவிடுவேனோ என்று
துருதுருவென ஓடி – ஒரு கை நெருப்பள்ளி…………………..

கை கருகிய வலியில் வாரி மேலெல்லாம்
இறைத்துக் கொள்கிறாய் –

நான் நெருப்பை சபிப்பேனா???
அடுப்பை சபிப்பேனா????
என் உயிர்; வலியில் கண்ணீராய் சொட்டி
பூமியையெல்லாம் நனைக்கிறது

நீ வாரியிரைத்த நெருப்பின் துண்டுகளை
மிதித்து கொண்டு உனைத் தூக்கிப் பார்க்கிறேன்
நெருப்பிற்கு நீ குழந்தையென்று தெரியவேயில்லை!!!!
——————————————————————————————–
வித்யாசாகர்

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சாபத்தின் விடிவு; பெரியார்!!

டவுள் பெயரில் அழிந்த மனிதத்தை
மீட்டு; மூடத்தை யொழித்த பெரியார்!

கருந்தாடி நரைப்பதற்குள் – ஒரு
காலத்தையே மாற்றிப்போட்ட பெரியார்!

என் தம்பிகளின் காலத்தில் – ஜாதிமதமற்று வாழ
என் தாத்தா காலத்திலேயே வழிசொன்ன பெரியார்!

கடவுளர்களைக் காக்க கடவுளை பழித்து
ஜாதியில் அறுந்த இதயங்களை –
காதலால் இணைத்து வாழ்வினை போதித்த பெரியார்!

காலச் சங்கிலியில் கட்டிப் போட்ட
கைம்பெண்களின் வாழ்கையை – மறுமணப் பந்தலிட்டு
வாழ்வை மல்லிகையாய்; கறுத்த மனங்களில் ‘தூவிய பெரியார்!

குடித்துவிட்டுவந்து அடித்த கணவனை
திருப்பியடிக்காவிட்டாலும் –
திருப்பியாவதுகேட்க தைரியம் தந்த பெரியார்!

பெண்ணியத்தை ஆண்களால் பேசவைத்து
பெண்விடுதலை உணர்வினை –
என் கிராமத்துப் மக்கள் அறிவு வரை எட்டவைத்த பெரியார்!

சுதந்திர..வேட்கையை விடுதலை உணர்வினை
கைஊனிய தடிபோலவே – கடைசிவரை
விடாது பிடித்திருந்தவர் பெரியார்!

சாஸ்திரம் சம்பிரதாயம்
ராகுகாலம் எமகண்டமென பெருத்துவிட்ட மூடத்தனத்தை
மொத்தமாய்கொட்டி பகுத்தறிவுதீயில்
அன்றே கொளுத்திட்டவர் பெரியார்!

ஜாதிக் குறும்புகளின் வெறும்போக்கினை
மதசண்டையின் வெறிப்போக்கினை
மனிதம் பாராத நிறம் பார்த்து வகைபிரித்த காழ்ப்புணர்வினை
ஆழக் குழிதோண்டி இன்றும் புதைத்துக்கொண்டிருக்கும்
நம் மூடசாபத்தின்; விடிவு பெரியார்!
—————————————————————————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

17 ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி!

மாலதி வீரவணக்க நாள் – அக்டோபர் 10

ம் விடுதலை போருக்கு
நாங்கள் கொடுத்த கொடை –
எம் மண்ணின் வீரம் வரலாற்றில் நிலைக்க விதைத்த
முதல் தாய்விதை; மாலதி!

பெண்ணின் வீரம் இதுவென்று
சமரில் காட்டிய முதல் பெண்புலி; விடுதலைக்கு
கனவு சுமந்தோர் மத்தியில் – களத்தில் இறங்கி
உயிரை கசக்கியெறிந்த போராளி; மாலதி!

உயிர்போகும் பயத்தை கொண்று
தன் ஆயுதம் காக்க அதிகம் பதைத்தவள்;
மானம் காக்க உயிர்விட்ட தமிழச்சி போல்
மண்ணின் வீரம் சொட்ட உயிர் குடித்தவள்; மாலதி!

சைனைட் குப்பி கீழே சாயும் முன்
உடல் சாய்ந்து மண்ணை முத்தமிட்டவள்;
வல்லுறவு கொண்ட மனிதமிருகத்திடம்
தன் பெண்ணுறவை காக்க சபதமேற்றவள்; மாலதி!

ஆண்பெண் சமநிலை மலர இருபத்தியிரண்டு
ஆண்டுகளுக்கு முன்னரே முழக்கமிட்டவள்;
ஈழக் கனவை இருபாலருக்கும் ஒரு கனவாக்கி
அதற்குத் தன் உயிரையும் உரமாயிட்டவள்; மாலதி!

பெண்கற்பை சூறையாடும் கயவர்களை யொழிக்க
நடு சாமம் நடுத் தெருவில் காவல் காத்தவள்;
எதிரியை சுட்டுப் பொசுக்க ஏந்திய துப்பாக்கியில்
தன் கனவையும் லட்சியத்தையும் ரவையோடு சேர்த்து சுட்டவள்; மாலதி!

கலகலப்பாய் பூக்கும் பூவில் ஒரு பூவாய்
பூத்தவள்; அண்ணன் தங்கை உறவில் – உள்ளத்தை
உயிர்நார் கொண்டு கட்டியவள்; உலகவழக்கு
எல்லாம் மறந்து தன் மனவழக்கின் தீர்ப்பை ஏற்பவள்: மாலதி!

நாட்டுக்கொரு போர் நாளும் நடப்பதை
ஒற்றை நபராய் தடுக்க நினைத்தவள்;
கடைசி மண் காற்றில் பறக்கும் வரை
ஈழத்தின் உயிர்பூவாய் பூக்க உதிர்ந்தவள்; மாலதி!!
———————————————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம்!!

வியரங்க தலைப்பு : “குடும்ப உறவுகளின் உன்னதம்”

ரங்கம் : ருசி உணவக வளாகம், குவைத்

நாள் : 01 – 10 – 2010, வெள்ளியன்று நடந்தேறியது

டத்தி பெருமைசேர்தது : குவைத் தமிழோசை கவியரங்கம்

ன்பிற்குரிய பெரியோர்களுக்கும் கவிபாட வந்திருக்கும் என் உறவுகளுக்கும் வணக்கம்!

பாடி திரிபவர்களை எல்லாம் பாட்டிற்கு தலைவனாகவும், உடையவனாகவும் ஆக்கி வரும் தமிழோசைக்கு என் நன்றிகளை தெரிவித்து கவியரங்கத்து சபைக்கு மீண்டுமென் தாழ்பணிந்த வணக்கத்தை பணிக்கிறேன்;

றவு பூத்த வாசலில் மனசெல்லாம் கோலமாகும்
கோலமிட்ட வீடுகளில்; உயிரெல்லாம் பசியாறும்
பிற உயிர் வாழ உயிர் வாழும் எம்மினமே; தமிழினமே
நீ ஒற்றை உதாரனம் போதுமென்பேன் –
குடும்ப உறவுகளின் உன்னதம் பற்றி சொல்ல –
நீ ஒற்றை உதாரனம் போதுமென்பேன் – மீதியை என்
கவிஞர் குழாம் பாடுமென்று சொல்லி – கவியரங்கத்திற்குள் நுழைகிறேன்!
————————————————————————————————–

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “அம்மா…”

சோரூட்டியது போகட்டும்;
உனை கொஞ்சி தலைகோதி
விளையாட அழகு பார்த்தது போகட்டும்;
ஊரெல்லாம் உன் வெற்றியை சொல்லி கொண்டாடி
வாசலெல்லாம் நீ வருவாயா என காத்திருந்தே
வயதை யொழித்த தாயன்பு போகட்டும் –

வேறென்ன தான் வேண்டும் ஒரு தாய் பற்றி சொல்லவெனில்
நம் செல்ல சகோதரி, வார்த்தையின் வீரியக் காரி
கவிதை உச்சரிப்பின் சொல்லழகி திருமதி தேவிரவியை அழைத்து கேட்போம் வாருங்கள் சகோதரி!

—————————————————————————————-

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக