வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம்!!

கவியரங்க தலைப்பு : “குடும்ப உறவுகளின் உன்னதம்”

அரங்கம் : ருசி உணவக வளாகம், குவைத்

நாள் : 01 – 10 – 2010, வெள்ளியன்று நடந்தேறியது

நடத்தி பெருமைசேர்தது : குவைத் தமிழோசை கவியரங்கம்

அன்பிற்குரிய பெரியோர்களுக்கும் கவிபாட வந்திருக்கும் என் உறவுகளுக்கும் வணக்கம்!

பாடி திரிபவர்களை எல்லாம் பாட்டிற்கு தலைவனாகவும், உடையவனாகவும் ஆக்கி வரும் தமிழோசைக்கு என் நன்றிகளை தெரிவித்து கவியரங்கத்து சபைக்கு மீண்டுமென் தாழ்பணிந்த வணக்கத்தை பணிக்கிறேன்;

உறவு பூத்த வாசலில் மனசெல்லாம் கோலமாகும்
கோலமிட்ட வீடுகளில்; உயிரெல்லாம் பசியாறும்
பிற உயிர் வாழ உயிர் வாழும் எம்மினமே; தமிழினமே
நீ ஒற்றை உதாரனம் போதுமென்பேன் –
குடும்ப உறவுகளின் உன்னதம் பற்றி சொல்ல –
நீ ஒற்றை உதாரனம் போதுமென்பேன் – மீதியை என்
கவிஞர் குழாம் பாடுமென்று சொல்லி – கவியரங்கத்திற்குள் நுழைகிறேன்!
————————————————————————————————–

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “அம்மா…”

சோரூட்டியது போகட்டும்;
உனை கொஞ்சி தலைகோதி
விளையாட அழகு பார்த்தது போகட்டும்;
ஊரெல்லாம் உன் வெற்றியை சொல்லி கொண்டாடி
வாசலெல்லாம் நீ வருவாயா என காத்திருந்தே
வயதை யொழித்த தாயன்பு போகட்டும் –

வேறென்ன தான் வேண்டும் ஒரு தாய் பற்றி சொல்லவெனில்
நம் செல்ல சகோதரி, வார்த்தையின் வீரியக் காரி
கவிதை உச்சரிப்பின் சொல்லழகி திருமதி தேவிரவியை அழைத்து கேட்போம் வாருங்கள் சகோதரி!

—————————————————————————————-

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “அப்பா..”

பூமிக்கு எனை
தாரை வார்த்த புண்ணிய தளம் என்றும்,

அவளின் முந்தானை
எனக்கான முதல் கைக்குட்டை என்றும்’ சொல்லி நம் தாயை நம் கண்முன் காட்டிய நம் அன்பு சகோதரிக்கு நன்றி கூறி – அடுத்த தலைப்பான தந்தை கவிதைக்கு செல்வோம்!

————————————————————————————————

வேர்வைகளால் பூத்த மலரில்
நம்மை வாசமாய் கமழ செய்தவரே;
இரவுபகல் நமை நினைத்து
தெருவெல்லாம் பயந்து நடந்து
வாழ்வெல்லாம் போராடிய உன்னதமே; உன்னதமே;
உன் காலடி தூசிகள் கூட – என் வாழ்வின் அற்புதமே; யெனில் –

உனைப் பற்றி நானென்ன சொல்ல..

இதோ என் கவி வந்து சொல்வார் – வாருங்கள் – ஐயா
திரு. சாதிக் பாட்சா அவர்களே;

————————————————————————————————

ஐயாவை பற்றி ஒரு விஷயம் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் –
தன்னம்பிக்கைக்கு இனி நாம் இவரை மட்டுமே –
அடையாளம் காட்டுவோம்; காரணம் ஆரம்ப கட்டத்தில்
கவிதைக்குரிய ஒரு ஆர்வம் மட்டுமே வெளிப்பட்ட இவர் ஆற்றலில்
இன்று பீறிட்டெழும் பா..’க்கள் ஆச்சர்யம் தான்.

அன்று, தன் ஆர்வத்தை,
உள்ளே சிக்கிக் கொண்டு தவிக்கும் பல கவிதையின் வேரினை
‘பிடித்தெரிந்து படைப்பாக்க இவர் பட்ட அவஸ்த்தை வேறு;

இப்போது இவர் அள்ளி அள்ளி வீசும் கவிதைகளின் ஜாலம் வேறு;
மிக்க பிரம்மிப்பும் வாழ்த்துக்களும் ஐயா!!

————————————————————————————————

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “கணவன்..”

தந்தையை பாடினால்
தரணியில் உயர்வு என்றும்,

உருப்படியாக நான் உங்கள்முன் நிற்பதற்கு
அவர் எடுபுடி ஆனாரென்றும்’ தந்தையின் அருமையினை நம் நெஞ்சமுருக பாடிச் சென்ற ஐயா சாதிக் பாட்சா அவர்களுக்கு நன்றியரிவித்து அடுத்த கவியரங்க தலைப்பான ‘கணவனுக்கான’ கவிதைக்கு செல்வோம்!

————————————————————————————————

சற்றே கண்மூடிய கோழி தூக்கம்,
மாத சம்பளம் வந்தாலும் வராவிட்டாலும் தொல்லை,
ஊரிலிருந்தாலும் – வெளிநாடு வந்தாலும் கடங்காரன்,
அம்மா மாமியார் அப்பா மாமனார் – யாரோ ஒருவருக்கு –
சற்று; சலிப்பான பிள்ளையான ‘கணவனை பற்றிக் கவிதை பாட,

நம் அன்பு சகோதரர், உழைப்பின் கொடையாளர், அன்பின் பெருமிதம் திரு உ.கு. சிவகுமார் ஐயா அவர்களை மேடைக்கழைக்கிறேன்…

————————————————————————————————

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “மனைவி..”

கட்டிலுக்கும் –
தொட்டிலுக்கும் பாடுபடுபவன் என்றும்,

சுமைகளை சுகமாக்கிக் கொள்ளும்
வரம் கணவனென்றும்’ மிக சிறப்பாக கவிதை பாடிய ஐயா அவர்களுக்கு என் மிகையான பாராட்டினைத் தெருவிகிறேன். காரணம், ஒரு கணவனை பற்றி ஒரு மனைவி எனும் பெண் பாட இருந்தார் சூழ்நிலை காரணமாக அவர் வர இயலாமல் போனாலும் தானே ஏற்று சிறப்பாக இவ்விரண்டு நாளில் கவிபடைத்த திறமையான தமிழோசையின் தலைமை இவர். ஐயா அவர்களுக்கு நன்றி பாராட்டி… அடுத்த தலைப்பான மனைவியை பார்ப்போம்
————————————————————————————————

தன் கனவுகளை அவனுக்காய் சுமப்பவள்
தன் சந்தோசப் பூக்களில்; அவன் குடும்பத்தை சுமந்தவள்
தன் அக்கறை பாத்திரத்தில்; அவனை மட்டுமே வார்த்துக் கொண்டவள்
அவனின் கோபதாப நெருப்பிற்கு தன்னையே விறகாக்கிக் கொள்பவள்
அவனுக்குள் தானாகி; தனக்காக மட்டுமே வாழ்பவளான
மனைவி – யை பற்றி கவிதை பாட செயல் வீரர், என் அன்பு சகோதரர்-
கவிதைகளை வார்ப்பதோடு கவிஞர்களை வார்க்கும் – தமிழோசையின் செயலாளார் திரு. பிரமோத் அவர்களை மேடைக்கழைக்கிறேன்!
————————————————————————————————

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக