அரைகுடத்தின் நீரலைகள் – 25

ரு மனிதன் பிறக்கையில்
பிறக்கிறது மரணமும்
மனிதனோடு வளர்கிறது மரணமும்
மரணத்தை கொன்று கொன்று
வென்று விட்டதாய் எண்ணும் நாளில்
மரணம் மனிதனை நெருங்குவதை
மனிதன் அறிவதுமில்லை,
மனிதன் அடங்குவதுமில்லை!
————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 24

னிதம் வளர்கத் தானே
கடவுள் கல்லாகவோ
அல்லது கல்லில் கடவுளோ
அல்லது கல்லின்றியோ கூட கடவுள்
கற்பிக்கப் பட்டது?

மனிதன் தான் பாவம்
மனிதனை கொன்றாவது
கடவுளை காப்பதாக எண்ணி
கொவில்களைமட்டுமே காக்கிறான்,

அவனின் காப்பகத்தில் சேமிக்கப் படுகின்றன
கொவிலால் கொள்ளப் பட்ட உயிர்கள்.

கடவுள்,
உடைந்த கோவிலின் வெளியே நின்று
மனிதனை தேடி அலைவார் போல்!
————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 23

ரு உயிரொழுக பூக்கிறது அன்பு;
இல்லாத மனசிலிருந்து.

மனசெனில்’ அறிவு தாண்டி
ஆத்மா நிறையுமிடமோ தெரியவில்லை.

நான் கேட்டது கிடைத்த சிரிப்பைவிட
வேண்டியதை இழந்த துக்கத்தில் –
மனசை அடையாளாம் காணாமல்,
உடம்பெல்லாம் எரியும் வேதனை தீயில்
மனசெங்கோ அன்பின் குவியலாக
இருப்பதாகத் தான் தெரிகிறது; எனக்குள்ளும்!

ஒரு பார்வையில் பரிதவித்து
முத்தத்தில் நிறைந்து
பிரிவில் தவித்து
ஏக்கத்தில் உயிர் கொள்ளும் மனசு
உடம்பின் வாழ்தலில் மட்டுமல்ல
மனிதத்திலும் நிறைந்து மனிதனாய் என்னை
அடையாளப் படுத்துவதாகவே உணர்கிறேன்.

எதுவாகிலும் மனசு எனக்குள் கனக்கிறது
அன்பிற்காய் ஏங்கி நிற்கிறது
இன்னும் நிறைய மனசுகளை தனக்குள்ளே
தக்கவைத்துக் கொள்ள தவிக்கிறது
அந்த தவிப்படங்கும் நாளில்
நான் உயிரற்றுப் போவேனோ???? அன்று
ஒரு வேலை இல்லாமல் போகுமோ என் மனசு??!!!
——————————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 22

னதில் கனக்கின்றன
சில முகங்கள்,
என்னால் நேரே அவர்களை பார்த்து
பேசிட இயலாத பழைய முகங்கள்.

ஆனால் இப்பொழுது முடிகிறது
அனிச்சையாய் அது நிகழ்கிறது
முகம் பார்த்து
இரண்டு கண்களை
நேராக பார்த்து மட்டுமே பேசுகிறேன் நான்;

ஆனால் அன்று முடியாததன் காரணம்,
இன்றும் நிறைய பேர்
நேராக பார்த்துப் பேச விருப்பம் கொள்ளவோ
இயலாமலோ ‘தவிக்கச் செய்வதன் காரணம்,
என்னை நானே உற்று நோக்க
இயலாமல் தவிக்கும் தவிப்பாய் நீள்கையில்,

எதிர்படுகிறாய் நீ –
உன்னை எல்லோரும் கடவுள் என்கிறார்கள்;

உன்னை என்னால் பார்க்க இயலாமையில்
உன்னை நான் காணாத பட்சத்தில்
நான் குருடனாகவோ அல்லது – நீ
இல்லாததாகவோ கருதப் படுகிறது!!
———————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அரைகுடத்தின் நீரலைகள் – 21

ங்கெங்கோ சுற்றி
மீண்டுமாய் நான் வந்து நிற்குமிடம்
ஒன்று கடவுள்
மற்றொன்று மரணம்;

இல்லை இல்லை
கடவுள் இல்லை எனில்
மரணமாக மட்டுமே போ,

மரணத்தில் மிஞ்சும்; கடவுள் இருப்பதான பயம்
அல்லது மரணத்தில் மரணிக்கும்
கடவுள் இருக்கும் இல்லாத நம்பிக்கை!!
————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக