அரைகுடத்தின் நீரலைகள் – 17

தம் ஜாதி
ஏன் இனம் கூட
உன்னை தாண்டி பிறரையும்
வளர்க்குமெனில்
வைத்துக் கொள்;

அது உன்னையல்ல
பிறரை
பிறர் உணர்வை
பிறர் வாழ்வை ஒடுக்குமெனில்
உன்னையும் சேர்த்துக் கூட
கொன்று முடி

மதவாதம் ஜாதிவெறி இனவெறி அறு
மனிதம் நிலைக்கும் வரை மட்டுமே
அவைகளில் பற்று கொள்!!
—————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 16

தம்
தேவையென்று நான்
எழுதியதுண்டு,

அதனால் என் கைகளை
இப்போது
முறித்துக் கொள்ள
முடியவில்லை,

நான் சொன்ன தேவை;
மனிதனை
மனிதனாக வைத்திருக்கும் வரையில் மட்டும்,
அல்லது வைத்திருக்க மட்டும் –
மதங் கொள்ளும் வரை’க்கல்ல!
——————————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 15

ஜாதி
மதம்
இனம்
ஏழை
பணக்காரன்
தொழில்
பிடித்தல்
பிடிக்காதது என ஏதோ ஒரு புள்ளியில்
சந்தித்தும்
சார்ந்தும் கொள்கிறான் மனிதன்;

மனிதம் தோற்கும் காரணி
அங்கேயிருந்து முளைவிடுகிறது!
———————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 14

காற்றுபுகும்
புகும் இடைவெளிக்குள்
புகுந்துவிடுவது போல்
புகுந்து விடுகிறது
எனக்கான சுயநலம்;

அறுத்தெறிய இயலாமையில்
வீட்டிலிருந்து
உறவிலிருந்து
நட்பு தாண்டி
தேசம் தாண்டி
கடவுள் வரை ஏற்பட்டது
விரிசல்!
————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 13

தேனும் ஒரு முகம்
நினைவுபடுத்தி விடுகிறது
உன்னை,

ஏதேனும் ஒரு முகம்
நினைவுபடுத்திவிடுகிறது
என்னையும்,

ஆழ சிந்தித்தலில்
எல்லோரும்
எங்கோ ஓரிடத்தில்
கலந்தே இருப்பதை உணரத் தான்
காலம்; மரணம் வரை நீள்கிறது!
—————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக