அரைகுடத்தின் நீரலைகள் -12

டிக்கும் காலத்தில்
படிப்பதை –
மனனம் செய்துக் கொண்டதில்
வெற்றி கொள்கிறது தேர்வு;

மனனம் மட்டும் செய்ததில்
ஆரம்பமாகிறது தோல்வி!
——————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 11

ன்னையும்
என்னையும்
ஒன்றென எண்ணியே
கைகோர்த்துக் கொண்டது
மதமும் இனமும்;

வேறுபடுத்திப் பார்க்கும்
சுயநல பார்வையிலிருந்து
உடைந்து போகிறது ஜனநாயகம்!
———————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 10

றக்கம் சொக்கும்
கண்களுக்குள்
காமத்தையும் கறுத்த இருள் படர்ந்த
இருட்டையும் புகுத்தும்
ஒரு பொழுதாகவே
இரவை எண்ணுகிறது மனசு;

வெற்றியாளனின் உழைப்பில்
இரவும் பகலும்
பெயரற்றுக் கிடக்கிறது!
———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 9

ளும்பும் நீராகவே
அலைகிறது மனசு
உள்ளே வலியோ கவலையோ
சிரிப்போ
மரணமெனும் ஒன்றோ
தேவைப் பட்டுக் கொண்டே
இருக்கிறது!
———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 8

ண்ணக் கொடுப்பதில்
பிறர் தின்னக் கிடைத்தலும்
தொந்தி ஒழித்தலும்
புலன்கள் புரிதலும்
வாழ்க்கை நெறி படுதலும்
உண்டென்பது

பட்டினியில் உள்ளவர்க்கும்
ஈயாத புத்திக்கும் –
ஒருகாலும் விளங்குவதில்லை!
—————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக