அரைகுடத்தின் நீரலைகள் – 7

வாழ்க்கையை
உலகை
வெற்றிகளை யெல்லாம்
சுண்டி ஒரு விரல் நுனியில்
வைக்க

மனசு போதும் என்று
தெரிந்தோ தெரியாமலோ
உணர்ந்தவர் தான்
முன்னே நிற்கிறார்;

புரியாதவர்கள்
வாயை மூடிக் கொண்டு
மனதை திறப்போம்;

நாளையாவது –
பின்னிருந்து முன் செல்லலாம்!
——————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 6

த்தனை சாமி வந்தும்
தன்னை
நான் தான் சாமி என்று
அடையாளப் படுத்திக் கொள்ள
இயலாமையிலும்
எப்படியோ நம்புகிறது மனசு
சாமியை!
—————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!

விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்
சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்
உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை
திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!

யிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு
பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு
மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை
விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்!

டிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு
உறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு
உடமையெல்லாம் இழந்தாலும் –
எதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்

மார்தட்டி ஊரொழிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி
காதலிச்சும் ஊர் பிடிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி
யாரடிச்சு யார் மாண்டுபோயினும் – எவனடிச்சும் சாகா தமிழனுக்கு
எழுச்சிக் கவிதைகள் கொடுத்தது; சுதந்திரம்!

பெண்ணென்றால் போகமென்றே வாழ்ந்தவனும்
அடுப்பூதி சமைப்பவளுக்கு படிப்பேனெனக் கேட்டவனும்
வைப்பாட்டி வைத்திருந்தாலும் வாரிசை மட்டும் வளர்த்தவனும்
திடுக்கிட நிமிர்ந்திட்ட பெண்ணின் பலத்திற்குமாய்
சேர்த்துக் கிடைத்தது; சுதந்திரம்!

யிருக்கெல்லாம் மண்ணென்ற விலைவைத்து
மண்ணிற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர்வைத்து
ஆடைமுதல் சோறுவரை மாற்றிவிட்ட வெள்ளையனால்
மாறாத பழைய தமிழனின் மானம் தந்தது; சுதந்திரம்!

காக்கை குருவி போல் சுட்டு சுட்டு எறிந்த
வெள்ளையனுக்கு, இறக்கப் போகிறோமெனத் தெரிந்தும்
மார்பை திருப்பிக் காட்டிய தமிழனின்
தியாகத்திற்குக் கிடைத்தது; சுதந்திரம்!

த்தநெடி மூக்கு சுரண்டி; செத்தபிணம் செவிட்டில் அறைந்து
முடங்கிக் கிடந்த சோம்பேறி இளைஞனை
அடிமை அடிமை என்ற ஓர்சொல்
அடங்கமறுத்து அடங்கமறுத்து பெற்றது; சுதந்திரம்!

வீட்டில் உறங்ககூட ஊரான் தடுத்ததை எதிர்த்து
வீட்டில் விளைந்ததைகூட ஊரான் பறித்ததை எதிர்த்து
வீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து
என் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை
எதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!
——————————————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 5

ஞானம் என்பது
அறிவென்று பொருள் கொள்;

அறிவு
சிந்தித்தலில் மட்டுமல்ல

செயலோடு
சிந்தித்தலில்
சிந்தித்து செயல் படுவதில்
செயலுக்கும் அனுபவத்திற்கும் சிந்தனைக்கும்
இடையே முடிவுறாத ஒன்றாய்
மீண்டும் முளைக்கிறது.

முடிவுற்ற அறிவு
அதாவது முடிவுற்ற ஞானம்
பேசுவதில்லை,
பேசக் கிடைப்பதில்லை
செயல்களாய் செயல்களில்
கலந்துகொள்கிறது!

கலக்காதவரை
சப்தமிடுகின்றன
அரைகுடத்தின் நீரலைகள்!
———————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 4

உனக்கும் எனக்குமிடையே
ஆயிரம் மைல்கள்
தூரமிருக்கட்டும்

நினைத்த உடன்
நினைக்கும் நீ
ஆயிரம் மைல்களை
கொன்றாய் என்று தானே
அர்த்தம்!
——————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக