உடைந்த கடவுள் – 19

ணித்துளிகளை
உடைத்து
உள்புகுந்துக் கொள்கிறது
கவிதை;

புரியவும்
அர்த்தப்படவுமே
நாட்களும் –
வருடங்களும்
தேவை படலாம்!
———————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 18

கம்கடித்து
துப்புவதாகவே
எண்ணிக் கொள்கிறார்கள்
நிறையபேர் –
பிறரின் உணர்வுகளை;

உணர்வுகள் கண்ணீராய் ஊறி
காய்ந்துவிடுவதாகவே எண்ணம்
அவர்களுக்கு.

பிறரின் மன வடுக்கள்
பிறருக்கு –
முழுதாக தெரிவதேயில்லை!
—————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 17

னதை அறுத்தும்
கெடுத்தும்
திருத்தவும் செய்யும்
நிறைய விசயங்களை
சொல்லித் தருகிறோம்
சினிமாவிற்கு ;

சினிமா
அதையே
திருப்பி நமக்கு சொல்லிக் கொடுத்து
நம் சந்ததிக்கும்
விட்டு செல்கிறது –

மனதை அறுக்கும் குடுக்கும்
விசயங்களை!!
——————————————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 16

ம்பது ரூபாய்
கொடுத்து குடிப்பவன் கூட
ஐந்து ரூபாய் கொடுத்து
இட்டிலி சாப்பிட – மறுத்து
ஏழை என்கிறான்.

இட்டிலி பணக்காரத் தனம்
எனில் –
ஐம்பது ரூபாய் விஸ்கி?

கேள்வி கேட்கவில்லை
எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம்
பயன்படலில், படுத்துதலில்
விழுந்தது போல் –
ஏற்றத்தாழ்வு விரிசல்களும்
வெற்றுமை கோடுகள்!
—————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 15

செய்கூலி இல்லை
சேதாரம் இல்லை
பத்து சவரன் வாங்கினால்
ஒரு கிராம் இலவசம்;

எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே
பார்க்க முடிந்தது –
தெருவில் பிளாஸ்டிக் வளையல் விற்ற
ஏழை பெண்ணிற்கு!!
————————————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக