பறக்க ஒரு சிறகை கொடு.. 3

னக்கும் எனக்கும்
ஜாதியென்றும்
மதமென்றும்
இனமென்றும்
பணமென்றும்
இல்லையென்று
ஏழையென்றும்
எத்தனை பேதங்கள் வேண்டுமாயினும் 
இருந்து போகட்டும்; 
பிடிக்கவில்லையென்ற 
ஒன்றை தவிர! 
———————————————————————-
Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 2

நீ பார்க்கும்
கண்ணாடியில் என்
நினைவு படர்ந்ததுண்டா?
 
நீ விளக்கும் பற்பசையில்
என் நினைவு –
இனித்ததுண்டா??
 
நீ எழுதும்
எழுத்துக்களில்
என் பெயர் தெரிவதுண்டா?
 
நீ பார்க்கும்
பார்வையில்
எனக்கான தேடலை வைத்திருக்கிறாயா???
 
தேடித் பார்..
எங்கேனும் உனக்குள் நான் 
நிச்சையம் இருப்பேன் –
 
இல்லையெனில்
எனை பார்க்காதே 
யாருக்கும் தெரியாமல் சிரிக்காதே
தெருமுனை சென்று திரும்பாதே
என்னருகே வந்து மௌனமாய் நிற்காதே
 
உன்னிடம் எனக்கென
ஏதும் இல்லாதலில்
நானும் எனக்கென
என்னிடம் ஒன்றுமேயில்லை என
எண்ணிக் கொள்கிறேன்;
உயிரும்!
———————————————————————-
Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பறக்க ஒரு சிறகை கொடு.. 1

ரு உயிர் பூத்த
நெருப்பாகத் தான்
என்னுள் நுழைந்தாயடி..
 
என் உயிரின்
ஆழம் வரை
நினைவுகளாய் பற்றி எரிந்தாயடி..
 
உன் ஒரு சொல்
வார்த்தைக்காய்
துடிக்க வைத்தாயடி..
 
உன் கடைக்கண்
பார்வைக்காய்
நாலும் தவித்தேனடி..
 
நீ சுற்றித் திரிந்த
தெருவெல்லாம்
நானும் அலைந்தேனடி..
 
நீ தொட்ட
பொருளெல்லாம்
சேர்த்து வைத்தேனடி..
 
நீ கோரும்
விருப்பத்திற்கே
வாழ்வை சமைத்தேனடி..
 
நீ இல்லாத
நொடியையும் கூட
சபித்தேனடி..
 
உனக்குப் பிடிக்காத
என்னையும்
வெறுத்தேனடி..
 
காதல் காதல் என்றே
உன்னில் –
கரைந்தேனடி..
 
சாதல் சாதலொன்றும் 
பெரிதில்லை – 
நீயின்றி நிச்சையம்; இறப்பேனடி..
 
நீ மட்டும்
உண்டென்றால் –
 
உண்டென்றால்ல்ல்ல்….?
 
வேறென்ன –
இனிக்க இனிக்க நகரும்
தருணங்களில் – இரண்டு கைவிரித்து வானில்
பறப்பமோடி;
உலகத்தை நம் சிரிப்பொலியில்
நித்தமும்.. நித்தமும்.. நிறைப்போமடி!!!
———————————————————————
வித்யாசாகர்
Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

எத்தனையோ பொய்கள் – வித்யாசாகர்!

அன்பு தோழர்களுக்கு வணக்கம்
 
இணையத்தில் இதயம் தாங்கி நட்பின் வானம் தொட்ட தோழமை உறவுகளே. நம் புதிய சிருங் கவிதைகளின் தொகுப்பான “எத்தனையோ பொய்கள்” விற்பனையில் உள்ளது. தமிழ் அலை ஊடகம் மூலமும், முகில் பதிப்பகம் மூலமும், தோழர் இசாக் (97862 18777) மற்றும் ஐயா கிரி ராஜ் (96000 00952) அவர்களை தொடர்பு  கொண்டு புத்தகம் பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் மூலம் வரும் தொகை சமூக நற்பணிக்கே பயன் படுத்தப் படுகிறது என்பதையும் பேரன்புடனும் மகிழ்வுடனும் தெரிவிக்கிறோம்.
 
நன்றிகளுடன்..
 
வித்யாசாகர்
Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஒரு பக்க விலாசம் – 1 (பெண்ணிய சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக