ஆஹா…. கண்கொள்ளா காட்சி..
கவிதைக்கு –
கவிதையோடு திருமணம்..
எழுதுகோல் பிடித்த விரல்களுக்கு
அன்பு தாங்கிய மனதிற்கு
ஆரணங்கு பரிசு..
தமிழச்சி துணையாக..
சமூகம் சுமந்த புத்திக்கு
இல்லற வரவேற்பு..
நல்லறம் பேசும் நாவெல்லாம்
காதலினி பா..’வாய் ஓத..
வாழிய வாழிய வாழிய அன்பிற்குறிய சகோதரா…
இனிவரும் காலங்கள்
எழிலும் வளமுமாய் பூத்து
நற்செல்வங்கள் பதினாறும் பெற்று
நல்லாசைகளெல்லாம் நிறைவேறி
நாளும்; நாலும்; நாடும்; பாரும் போற்ற
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு!
பேரன்புடன்..
உலக உயிர்களின் சார்பாகவும் –
வித்யாசாகர்






























