பிரிவுக்குப் பின் – 78

நீயும் நானும்
தெருவில் நடக்கையில் –
நீ என் கை பிடித்து வருவாய்,
உள்ளுக்குள்ளே –
ஆயிரம் தேவதைகள் கூட
நடப்பது போல் உணர்வேன்;

இங்கும் நான்
தனியே நடக்கையில்
நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து
என் கை பிடித்துக் இழுக்கிறாய்;
நான் திரும்பிப் பார்ப்பேன் –
நீ மட்டும் தெரிவதேயில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 77

ன்னை அடைந்தப்
பின்னரே இரவின்
வெளிச்சங்கள் கூட –
ரகசியமாய் புரிந்தது;

உன்னை பிரிந்த
பின் தானே –
பகலில் கூட வாழ்வின்
இருள்கள் துளிர்கின்றன!

உண்மையில் பகலை தொட்டு
அடையாளம் கண்டுகொள்ளும்
என்னால் –
இரவை தான் நீயின்றி
தொடவே முடிவதில்லை;

ஆயினும் –
இப்போதெல்லாம்
இருபத்தி நான்கு மணிநேர
இருட்டில் தான் வாழ்கிறேன் நான்
உன் – பிரிவுக்குப்பின் என்பது
உனக்கும் எனக்குமே புரியும்!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 76

ன் –
கால் கொலுசும்..
கை வளையல்களும்..
சொல்லிடாத –
சேதி கேட்டும்;
சொன்ன –
இரவுகளை நினைத்தும் தான்
நகர்கிறது –
வாழ்வினிந்த –
அர்த்தமற்ற நாட்கள்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

32 பழைய வாடகை வீடு..

புதிதாக குடி வந்த
பழைய வாடகை வீட்டில்
இதற்க்கு முன்னிருந்த எல்லோரின்
அடையாளங்களும் பழமை
பூத்திருக்க –

சுற்றி சுற்றி தேடியதில்
மூடியற்ற –
எழுதாத எழுதுகோலும்
பழைய நாளிதழ்களும்
பயன்படாத துணி பிடிப்பானும்
எங்கோ மூலையில் கிடந்த
ஒரு துண்டு சிகரெட்டும்
இருந்து போனவர்களை பற்றி
என்னென்னவோ பேசியது.

இதற்கு முன்
யார்யாரெல்லாம் இருந்தார்களோ
எப்படி எப்படியெல்லாம் வாழ்ந்தார்களோ
இவ்வீட்டில்;

ஆடிப் பாடி சிரித்தவர்கள்
அழுதுகொண்டே போயிருப்பார்களோ?!

இனியும் இவ்வீட்டிலிருந்து
அழமுடியாதென்றோ
சிரிப்பு போதவில்லை என்றோ தேடி
வேறு வீட்டிற்கு சென்றிருப்பார்களோ?!

அந்த புது வீட்டில்
அவர்கள் – இங்கு விட்டுச் சென்ற
வாழ்தலை புதுப்பித்தோ –
கூட்டியோ பெற –
அவர்களுக்கு எத்தனை நாட்கள் பிடிக்குமோ;

நான் மட்டுமென்ன –
சொந்த வீட்டுக் காரனா….?
எனக்கும் அப்படித் தானே?
நான் விட்டுவந்த என்
பழைய வீட்டின் ஞாபகங்களும் –
என் குடும்பம் காட்டிய அன்பும்
அக்கறையும் வெறும் கல்லாகவும் மண்ணாகவும்
சுவராகவும் தானே தெரியும் அங்கு
புதியதாய் வருபவர்களுக்கு?

எத்தனையோ வீட்டில்
நான் தொலைத்த என் இருப்பை
திருப்பித் தர இயலாமல்
புதிய வெள்ளையை தானே
பூசிக் கொள்கிறது வீடுகள்.

சுவற்றில் சாய்ந்து அமர்ந்து..
தலை முட்டியழுது..
தொட்டு தொட்டு பார்த்து..
கல்லுக்குள் சேகரித்த என்
காலையும் மாலையும் –
மீண்டுமெனக்கு கிடைக்கவா போகிறது?!

வாடகை கொடுத்து வெளியேறியதும்
வெகு இலகுவாய்
வீட்டை கழுவி ஒரு
‘டூ-லெட்’ பலகையை மாட்டியதில்,
தன்னை வெறும்
வீடென்று காட்டிக் கொள்ளும்
கல் மணல் கட்டிடங்களுக்குள்
எத்தனை பேரின் வாசமும்
சுவாசமும்
நினைவும்
திருப்பிக் கிடைக்கப் பெறாத பொழுதுகளும் இருக்கிறதென
வாடகை விடுபவர்களுக்கு தெரிய
நியாயமில்லை தான்.

போகட்டும் –
தூக்கிவந்த அத்தனை பொருட்களுக்கு
இடையிலும் –
நிரந்தரமாக ஒரு வீடு தங்குமா எனும்
ஏக்கக் கனவுகளே கனக்கின்றன என்பதை
இந்த புது வீடு மட்டுமென்ன –
தெறிந்தா வைத்திருக்கப் போகிறது?!

அல்லாமல் –
இந்த வீடு எனக்காக
எத்தனை நாட்களை மாதங்களை
வருடங்களை தீர்மானித்து
வைத்திருக்கிறதோ; யாருக்குத் தெரியும்?!

போகட்டும் – எனும்
ஒற்றை வார்த்தையோடு சேர்த்து
வாசலில் செருப்பையும் கழற்றி விட்டுவிட்டு
இவ்வீட்டில் –
இதற்கு முன் வாழ்ந்தவர்கள்
இவ்வீட்டின் எங்கேனும் மூலையில்
விட்டுச் சென்ற –
அவர்களின் புன்னகைத்த சப்தங்களையும்
அழுத கண்ணீரின் ஈரத்தையும்
ஒவ்வொரு அறையாக சென்று
தேடுகிறேன் –

வீடு முழுவதும்
தேய்த்து தேய்த்துக் கழுவியதில்
வந்து போனவர்களின்
கணக்கில்லாவிட்டலும்
நிறைய பேரின் வாழ்க்கையையும்
நிறைய குடும்பத்தின் கதைகளையும்
சுவற்றின் பழைய கரைகளும்
ஆணியடித்த சுவடுகளும் –
சப்தம் குறைத்தாவது சொல்லாமலில்லை;

எனக்குத் தான் –
காது கொடுத்துக் கேட்க மனதில்லாமல்
காதுகளை மூடிக் கொள்கிறேன் நான்
உள்ளே –
விட்டுவந்த வீட்டின் நினைவுகள்
கண்ணீராய் சொட்டுகிறது;

வருடகாலமாக வாழ்ந்த
அந்த வீட்டின் வாழ்க்கையை
கண்ணீரோடு சேர்த்து துடைத்துவிட்டு –

புதிதாக கொண்டுவந்த வாழ்க்கையை
இவ்வீட்டின் மேலே பூசி –
பின்னாளில் வரும் எவருக்கேனும்
விட்டுசெல்ல தயாரானோம்.

அதோ; பால் பொங்கிவிட்டதாம்
மனைவியின் புதுவீட்டுச் சிரிப்பு
அப்பட்டமாய் மறைத்துத் தான் கொண்டது
பழைய வீட்டின் நினைவை!!
—————————————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 8 பின்னூட்டங்கள்

குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் கலையிலக்கிய விழா

அன்புடையீர் வணக்கம்

ரும் வெள்ளிக் கிழமையன்று, குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் கலை இலக்கிய விழா சிறப்பாக நடைபெற உள்ளது. வர இயலும் அன்பு தமிழுள்ளங்கள் கலந்து சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : மே மாதம் 21 ஆம் நாள், வெள்ளிக் கிழமை
நேரம்: மாலை 06:00 மணியளவில் துவக்கம்.
இடம்: பிந்தாஸ் அரங்கம், குவைத்.

மிக்க நன்றிகளுடன்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , | 9 பின்னூட்டங்கள்