குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு

ந்த கவியின் குரலை
சிங்க குரலில் வென்றவனே;

சின்ன பிள்ளை சிரிப்பில்
நெஞ்சம் கொள்ளை கொண்டவனே;

கொட்டும் மழை போல
இடி முட்டும் மேடைக் கொம்பனே;

படை கட்டி எவர் வரினும்
சற்றும் சலிக்கா வம்பனே;

சங்க கவி போல
மாதவி சொந்தம் கொள்ளும் மன்னனே;

பெற்றோர் உற்றாரெல்லாம் மகிழ
உயர்வாய் வாழ்ந்துக் காட்டு இன்பனே;

பாவையோடு கூடி
தமிழ் ‘பா’ வை மறவாய் கவிஞனே;

உற்ற கவிதை போல மீண்டும்
பல கவிதைகளை பெற்றெடு தோழனே;

வாழையடி வாழையாய் நீ
நீடு வாழி செவ்வனே;

நற் செல்வங்கள் பதினாறும் பெற்று
நலமோடு வாழு இளையோனே!!
——————————————-

இம்மாதம் இருபத்தி நான்காம் நாள் நடைபெற இருக்கும் குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு நம் மனமார்ந்த நல்வாழ்த்தினை தெரிவிப்போம் தோழர்களே!!

வாழ்த்துக்களுடன்..

வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

எனை சுட்டுப் போட்ட சமூகம்!!

தோ ஒரு கவிதையின்
கிறுக்கலில் –
கொட்டிவிட இயலாத
உணர்வின் மிகுதியில்
நனைகிறது மனசு.

காதல் கடந்து
வாழ்க்கை கடந்து
இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து
இறக்கப் போகும் அப்பாம்மா வரை
எண்ணி அழுகிற பலரில்
என்னையும் ஒருவராய்
வைத்துக் கொள்ளுங்கள். .

யார் யாரையோ தேடி
எங்கெங்கோ அலைந்து
என்னெனவோ செய்து –
எதிலுமே நிலைக்காத புத்தி
என் தவறா தெரியவில்லை.

மனதின் போக்கு நீளும்
அத்தம் வரை –
கண்ணீரே.. கண்ணீரே.. வென
கடக்கிறேன் பொழுதுகளை
எதற்கென்றே தெரியாமல்.

இன்னும் –
என்னென்னவோ வலிகள்
எப்படி சொல்வதென்றே தெரியாமல்
கனக்கிறது உள்ளே.

அத்தனையையும்
வெளியில் சொன்னால் –
உலகம் வெகு இயல்பாய்
அவனொரு ‘சைக்கோ’ என்று
சொல்லிவிட்டு –
தன்னை சரியென்று மெச்சிய கம்பீரத்தில்
மேலேறி சென்றுவிடும்.

மனிதர் மெத்தனமாய் இருப்பது
மொத்தமும் புரிந்தும் –
போகட்டும், எதற்கோ வீண்
சிந்தனை என்று அலட்டிக்
கொள்ளாமல் விடாதலில் –
தனிமை கொன்று வீழ்த்தியும்
யாருடமே பேசுவதில்லை நான்.

உண்மையில் –
எனக்கான கவலையென்ன?

உணவோ
உடையோ
சுகமோ துக்கமோ என்றால் –
பளீரென இல்லை என்று தலையாட்டலாம்.

பிறகென்ன; ஏனிந்த
பிதற்றல் என்கிறாயா…………?

ன் கவலைகள் மொத்தமும்
நீ – எனில்
ஏற்ப்பியா என் சமூகமே???
—————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 33

ன் காதலி கூட
உனக்கு –
இத்தனை முத்தம்
கொடுப்பாளோ என்னவோ;
அத்தனை முத்தத்திற்கு பிறகும்
உனையே நினைக்கிறது மனசு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 32

ண்மையில் –
நீ என் மகன் என்பதை விட
நான் உன் அப்பாயெனும்
மகிழ்வில் மீண்டும் மீண்டுமாய்
பிறக்கிறேன்;

உன் ஒவ்வொரு சிரிப்பிலும்
பூக்கிறேன்;

நீ அழுத கணத்தில் உடைகிறேன்;

நீ வளர வளர –
என்னை நானே தொலைப்பேனோ என்ற
பயத்திலும் –
உன்னை வளர்க்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 31

தவோரம் –
ஒளிந்துக் கொண்டு பார்ப்பாய்,
ஓடி வந்து –
கட்டிப் பிடித்துக் கொஞ்சுவாய்,
உயிர் மென்று
குடித்துவிடுவதாய் எனை
தேடிக் கதறுவாய் –
இதெல்லாம் உனக்கு
நினைவற்று போகும் நாளில்
நானென்ன ஆவேனோ!!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக