மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (37)

தேச ஜாம்பவான்களே
வாருங்கள்;
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில்
ஒரு விளக்கேற்றிச் செல்லுங்கள்;
உம்மோடு –
மனிதராய் பிறந்ததற்கு
ஒரு விளக்காகவேனும்
எறிந்துவிட்டுப் போகட்டும் எம்
உறவுகள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மேதினம் விடுமுறைக்கான நாளல்ல தோழர்களே!!

நாளெல்லாம் வெய்யிலில்
ஐஸ்வண்டி தள்ளுபவனுக்கோ,

தெருவோரம் அமர்ந்து உச்சி பிளந்து
ஒரு கத்தை கீரை வாங்கக் கூவி கூவி விற்கும்
வயதான தள்ளாத கிழவிக்கோ,

பத்துபாத்திரம் தேய்த்து தேய்த்து
கையில் ரேகை மறைந்து போன
என் குடிசை வீட்டு சகோதரிக்கோ,

ஊரெல்லாம் சுற்றி கால் வீங்கிய
காய்கறி காரனுக்கோ..

கையெல்லாம் காரத்தால் வெந்துபோன
சுண்ணாம்பு அடிப்பவனுக்கோ..

மீன் விற்பவனுக்கோ
மூளை தெரு பெட்டிக் கடை
அண்ணாச்சிக்கோ –
காலையில் பேப்பர் போடும் சிறுவனிலிருந்து
மாலையில் நடந்து
பால் கொண்டு வரும் தாத்தா முதல்
மேதினக் கொண்டாட்டம் இருக்குமெனில்

தெருவெல்லாம் பெருக்கி
நச்சு கால்வாயில் தூர் வாரும்
தொழிலாளிக்கு ஓர்தினம்
வாழ்வு மலருமெனில் –

நம் வாழ்வின் முன்னேற்றத்தால்
அவர்களின் நிலையை சற்று மாற்ற முடியுமெனில்
ஏழைகளின் சுமையை குறைக்க
நீயும் நானும் காரணமாவோமெனில் அன்று
உனக்கு நீயும் –
எனக்கு நானும்
மேதின வாழ்த்து சொல்வோம்;

அதுவரை இதை ஒரு
அதிகாரம் எதிர்க்கக் குறித்த
போராட்ட நாளென்றே கொள்வோம்!
——————————————————————
வித்யாசாகர்

மேதின வரலாறு: http://natputanramesh.blogspot.com/2010/05/blog-post.html
மானுட விடுதலை மற்றும் தோழர் முத்துக்கண்ணன் அவர்களுக்கு நன்றி!

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 70

காற்றினை –
கிழித்துக் கொண்டு வந்து
என்னை தொடும்
உன் கண்ணீருக்குத்
தெரிவதில்லை;

உன் அழுகையில்
அதிகம் வலிப்பது
என் இதயம் தானென்று!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 69

தயம் –
வலிக்கிறதென்பதே
தெரியாமல் தான் நீ
கடந்துக் கொண்டிருக்கிறாய்
என்னை;

கடை தூரம் சென்று
திரும்பிப் பார்க்கையில் -ஒருவேளை நான்
இருக்கலாம்;
இல்லாமலும் போகலாம்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 68

வாழ்க்கையில் உணரும்
ஆயிரம் –
அர்த்தங்களுக்கு இடையில்

மனம் எங்கோ..
யாரையோ..
எதற்கோ…
தேடிக் கொண்டு தான்
இருக்கிறது;

நீ-
மட்டும் தான்
அடிக்கடி – இடையே வந்து
என் தேடலின் அர்த்தத்தை
நீயென்றுரைக்கிறாய்!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக