உன் –
ஈரமில்லா
SMS முத்தத்தில் தான்
நனைந்து நகர்கிறது
என் –
சிரிப்பினை மறந்த
வெளிநாட்டு
வாழ்க்கை!
உன் –
ஈரமில்லா
SMS முத்தத்தில் தான்
நனைந்து நகர்கிறது
என் –
சிரிப்பினை மறந்த
வெளிநாட்டு
வாழ்க்கை!
நகர்ந்துக்
கொண்டு தானிருக்கிறது
நாட்கள்;
குறைந்துக் கொண்டு
தானிருக்கிறது – என்
காலம்;
வாழ்க்கையின் வலிய
ஆட்டத்தில் –
உனை சந்திக்க வேண்டிய நாட்கள் மட்டும்
அதோ எங்கோ
வெகு தொலைவில்!
விடாமழையில்
நனைந்த ஈரம் போல்
கவலையில் –
நனைந்து கனத்த
இதயமாகவே –
என் பயணம்;
சிரிப்பு
நிம்மதி
என்னும் முட்களின் மீதே
நகர்கிறது – உன்
பிரிவுக்குப் பின்..
வெகு நாட்களுக்குப்
பிறகு –
ஒரு சின்ன –
மழைத் துளியில்
உலகம் நனைந்த
சந்தோஷம்;
நீ இன்று
குலுங்கி குலுங்கி
சிரித்ததை
தொலைபேசியில் கேட்டேன்!!
என் உயிரில்
முள் குத்தியதாய்
உணர்ந்த பொழுதே
நினைத்தேன்;
நீதான் அங்கு
அழுகிறாய் என்று,
எட்டித் –
துடைப்பதற்குத்
தான் –
இந்தியாவும் குவைத்தும்
அருகருகில் இல்லையே!!