பிரிவுக்குப் பின் – 62

விதைக்கு
பரு பொருள்
ஞானமல்ல;

வலி என்பதை –
நீயில்லாத கால
இடைவெளியில் –

கனத்து நிற்குமென்
கவிதைகள் சொல்கின்றன!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 61

னக்குப்
பிடித்தமான
உணவுகளை –

நீயில்லாத பொழுதில்
தின்கையில்

கண்ணீரின் உப்பு
அதிகமாக தான்
கரிக்கிறது!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

89 வாழ்க்கையை படி!

நிறைய நிரபராதிகளின்
வாதம் –
சிறை கம்பிகளுக்கிடையே
நின்று –
உலகை வெறித்தாலும்,

வெளியே நிற்கும்
குற்றவாளிகளுக்கு
வெறும் – பணம் தரும் சிரிப்பு
பணம் தீரும்போதே
நின்றும் விடுகிறது!

நிற்க,
இங்கே சிறைக் கம்பிகளுக்கிடையே
வீழ்ந்த ‘நியாயமே’ பேசப் பட
வேண்டுமெனில் –

நிரபராதிகள்
காலத்தின் கேள்வியாய்
சிறைகம்பிகளுக்கு மத்தியில் நில்லாமையை
நீயும் நானும்
சேர்ந்து சிந்தித்தாலன்றி மாறாது!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

90 வாழ்க்கையை படி!

குடிப்பவன் குடிக்கிறான்
நல்லவனென நடிப்பவன்
நடிக்கிறான்,
இருப்பவனின் நாற்றம்
வெளியில் தெரிவதில்லை.

இல்லாதவனின் நாற்றம்
பெரிது படுத்தப் படுவதில்லை.

இரண்டுக்கும் மத்தியில்
பண்பாடு குலைகிறது
அநாகரிகம் கூட
நாகரீகமென மெச்சப் படுகிறது;
காலமாற்றம் என்னும் ஒற்றை
பெயரில் –
நிறைய பேர்
தவறாகவே பதியப் பட்டிருக்கிறோம் –
கால ஏட்டில்!!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

91 வாழ்க்கையை படி!

ரெல்லாம்
மரணமும்
மல்லிகை தோரணமும்
வேளை வேளைக்கு சோறும்
உடுத்த பட்டாடையும்
மினுக்க அத்தனையும்
இருந்துக் கொண்டு தானிருக்கிறது;

இறப்பவரை பற்றியும்
அழுபவரை பற்றியும்
வருந்தாத இடத்திலிருந்தே –
சிரிப்பவருக்கும் –
மினுக்குபவருக்கும்
மரணுமும் மல்லிகையும்
மறுபரிசீலனை செய்யப் படுகிறது!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக