92 வாழ்க்கையை படி!

பூமி உருண்டையாம்
இருக்கலாம்,
சுற்றுகிறதாம்
இருக்கலாம்,
இருந்தும் –
என்றோ நாம் தொலைத்த விஷயங்கள்
பூமி சுற்றி வருகையில்
கிடைத்திடாததே வருத்தம் என்கிறோம்,
ஒன்றை புரிவோம் –
நாம் தொலைத்த அனைத்தும்
நம்மை சுற்றியே கிடக்கின்றன;
தொலைத்ததும் –
எடுக்க வேண்டியதும் நாமே; நாமே;

மாற்று வழி இல்லாது
இயற்கையில் ஏதுமே
மறைவதில்லை!!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

93 வாழ்க்கையை படி!

த்தனையோ
ஆனந்தாக்கள் –
நம்மை சீர்குலைத்து
பாடம் புகட்டுகிறார்கள்;

நிறைய வங்கி
கொஞ்சம் கொஞ்சமாக
நிறைய வாங்கிக் கொண்டு
நமக்குக் –
கொஞ்சம் தருகிறது;

வேளைக்கு சம்பளமும்
வாங்கிக் கொண்டு –
வேலையையும் முழுதாக செய்யாமல்
மேலே லஞ்சமும் வாங்கி
பின்பும் நாலுமுறை இழுக்கடித்து செய்து
எவனோ கால் மேல் கால் போட்டு
அமர்கிறான்.
இதெல்லாம் தெரிந்தும் நாம்
அவனிடம் கைகட்டியே நிற்கிறோம்;

காலக் கொடுமை…,
எதேவேண்டுமாயினும் இருந்து விட்டுப்
போகட்டும்,
நம் கண் மறைத்து உலகில்
ஒன்றுமே நிகழ்வதில்லை என்பதை
புரிந்து –
தவறு செய்பவனை சட்டை பிடித்து
இழுக்காத வரை –
நம் ஆண்மை கைகட்டிக் கொண்டும்;
எவன் காலோ இன்னொரு கால் மேல்
இட்டுக் கொண்டுமே இருக்கும்!!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

94 வாழ்க்கையை படி!

காற்றையும்
நீரையும்
வெளிச்சத்தையும்
விலையாக்கிக் கொண்டு
விலை கொடுத்து வாங்க
ஓடும் –
உழைக்கும் –
வஞ்சினம் கொல்லும் நம்மை
காற்றும் நீரும் வெளிச்சமும்
பார்த்து சிரிக்காமலா இருக்கும்??

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

95 வாழ்க்கையை படி!

ல்லவர்
கெட்டவருக்கு இடையே
தவறை திருத்திக்
கொள்ளுமளவே இடைவெளி;

திருந்தாதவருக்கும்
சாமானியருக்கும்
நல்லவன் கெட்டவன்
என்பதே –
உலகின் அளவுகோல்!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

96 வாழ்க்கையை படி!

த்தனை முறை
அடித்தாலும் –
மீண்டும் மீண்டும்
அதே தவறை செய்கிறது
குழந்தை;

பிறகு வளர்கையில்
பாதி திருந்தியும்
பாதியை தனக்குள் மறைத்தும்
கொண்டதில் –
நல்லவர்களாகி விடுகிறோம்
நாமெல்லாம்!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக