137 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

திவேக சாலையில்
திடீரென –
குறுக்கே வந்த வாகனம் கண்டு
தற்காலிகமாக அழுத்திய
வேகத்தடையில் –
வண்டி நின்றுவிட்டாலும்,
இதயம் –
சுக்குநூறாக உடைந்து
படபடக்கிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

136 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

மிதிவண்டியில்
பயணிக்கையில் –
மோட்டார் பைக் பெரிதாக தெரிந்தது;

மோட்டார்பைக்
வாங்கிய போது
மகிழுந்து பெரிதாக தெரிந்தது;

மகிழுந்து ஓட்டுகையில்
பேருந்தோ லாரியோ
பெரிதாக தெரியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

135 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

தெருவோரத்தில்
வாகனங்கள்
வரிசையாய் நிற்கிறது;
எத்தனையோ பேரின்
அவசரம்
தெரிந்தோ; தெரியாமலோ;

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

134 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

நெடுஞ்சாலையின்
ஓரத்தில் –
எழுதிவைக்கப் பட்டுள்ள
வாகனக் கட்டுப் பாட்டுத்
துறையின் அறிவிப்பு
எல்லோரின் வேகத்தையும்
கட்டுப் படுத்தி விடவில்லை;

நிறைய –
விபத்துகளை மட்டும்
கணக்கில் வைத்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

133 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

ள்ளூர் நெரிசல்களை தாண்டி
நெடுஞ்சாலைகளில்
அதிவேகமாய் பயணிக்கும்
வாகனங்களுக்கிடையே
அறியாமல் ஓடிவரும் சிறுவனை
எந்த பிரேக்கும்
சாமியும் –
காப்பாற்றிவிடுவதில்லை;

ரத்தம் மட்டும் –
காண்பவரின்
இதயத்தை நனைத்துவிட்டு
வாகனங்களின் வேகத்தில்
காய்ந்தேவிடுகிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக