35 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

மொழி
இனம்
மதம்
யாராகவேனும்
எதுவாகவேணும்
இருந்துவிட்டுப் போகட்டும்
ஒரு மனிதராகக் கூட
என்னாது –
சுட்டு சுட்டு எறிந்த சிங்களனக்கு
துணைபோன தேசத்தில் தான்
நானும் குடிமகன்;
தமிழன் வேறு;
மனிதன் என்று சொல்லத் தான்
எனக்கே வெட்கம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 3 பின்னூட்டங்கள்

34 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

காட்டிக் கொடுத்தவன்
திருடித் தின்றவன்
அண்டிப் பிழைத்தவன்
இறந்த –
சகோதரிகளின்
சவத்தின் மீதேறி ஓடிய
ஒருசில துரோகிகள்
சிங்கள இனமானான்.

கைகால் இழந்து
ஈழத்தையே சுவாசித்து
பட்டினி, போர், துக்கத்தால்
இறந்தவன் –
ஈழ விடுதலை வெல்லும்
வெற்றிக் கொடியை
நாளை –
விண்ணில் பறக்கவிக்கும்
காற்றாயினான்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

33 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

ன்னித் தீவில்
ஒரு –
குழந்தை கதறி அழுதது.

போருக்குப் போன
அப்பா இறந்திருக்கலாம்..

அம்மா போருக்குப் போகும்
வழியில் கூட
இறந்திருக்கலாம்..

குழந்தை –
தானும் சென்று
ஒரு சிங்களனையாவது சுட்டு
என்னிரு –
தமிழரை காக்கவில்லையே – யென
அழுதது போல்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

32 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

போரில்
விடுதலைக்காய்
உயிர்விட்டவர்கள்
போர்வீரர்கள் ஆனார்கள்.

அருகில் இருந்தும்
வேடிக்கை மட்டுமே
பார்த்தவர்கள் –
கோழைகளா??
கல்நெஞ்சக் காரர்களா??
எதிர்க்கும் திராணி போதாதவர்களா???
அவரவரே –
முடிவு செய்துக் கொள்ளட்டும்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

31 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

ரு இனத்தின்
பிணவாடை –
உலகமெலாம் வீசியும்
மூக்கை மூடிக் கொண்டு
சேனல் மாற்றியது
அதே சுயநல இனம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக