25 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

சிங்களனும்
உடன் சங்கறுக்கும் துரோகிகளும்
தந்திரத்தால் செய்த
நச்சு குண்டுகள் வீசப் பட்டன;

அதை உள்ளிழுத்து
போரில் –
உமிழ்ந்து துப்பியதில்
இறந்தது
கோழைத்தனம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

ஒன்று படுவோம்; உலகிற்கே போதிப்போம்!

ன்னுமொரு குரங்கின்
மனோபாவத்திலேயே
பரிமாண வளர்ச்சி பற்றி
பேசியும் எழுதியும் கொள்கிறான்
மனிதன்.

ரண்டில் எது சரி
என்று யோசித்த இடைவெளியில்
எத்தனை மனிதர்களை
இழந்து விட்ட
இனம் நம்மினம்.

ன்று ஏதோ ஒன்று
முடிந்துவிட்டதாய்
என்னவோ தன்னால்
நடந்துவிட்டதாய் –
பிணங்களின் மண் மூடிய
தரையில் அமர்ந்து,
அடிமை சிறையில் அகப்பட்ட
எத்தனையோ தமிழர்களின் வலியை சுவாசித்து,
தன் தேசம் தேடி தேடியே
வாழ்நாளை தொலைத்த
பலருக்கு நாம் பொறுப்பல்ல
என்று திரியும் ஒரு
உத்தம மனிதர்கள் நாம்.

யிர் சேதம்
எங்கு நடந்தாலும்
இழப்பு இழப்பு தான்
உயிர் உயிர் தான்;
என்றாலும் எதற்கான இந்த
போராட்டம்???
ஏனிந்த ஈழ வேட்கையென
சிந்திக்கும் அவகாசத்தை
ஏனோ அதிகம் பேர் தொலைத்துவிட்டோம்.

காற்றின்
நெருப்பின்
தண்ணீரின்
சுதந்திரம் இல்லாவிட்டால் பரவாயில்லை.
மரத்தின்
விலங்குகளின்
ஏன், ஒரு ஜடப் பொருளுக்குரிய
சுதந்திரம் கூட –
ஒரு தமிழ் இனத்திற்கு
முழுதாய் இல்லாமல் போன அவலம்
நமக்கு இன்னும் புரிபடாமல் போனதே
ஒற்றுமை குளைவின்
முதல் புள்ளியானது.

இன்று, புள்ளிகள் பெருக்கெடுத்து
ஜாதி.. மதம்.. ஏற்றத்தாழ்வு..
பதவி.. பேராசையென
அறுபட்டுக் கிடக்கிறோம்.
நம் அறுபட்ட விரிசல்களில்
கொடி நாட்டி, சிங்களன்
போர்வீரனானான்;
நாம் தீவிர வாதியானோம்.

னி,
ஒன்றுபட்டு என்ன செய்துவிட என்று
யாரேனும் கேட்டுவிடாதீர்கள்.
தமிழன் ஒன்று பட்டால்
தரணி தலை கீழ் நிர்கவேண்டுமெனில் நிற்கும்
திரும்பிப் பாரேனில் பார்க்கும்.
பிறகென்ன –
ஒன்று பட்டு வாருங்கள்
ஈழத்தை இதோ இப்போதே
பரித்துவிடுவோம் என்றால் சாத்தியமா???

ஆம்; இல்லையை
அகற்றிப் போடுங்கள்.

நாடு இழந்து
வீடு இழந்து
உறவுகளை இழந்து
நோய்வாய் பட்டு
இறக்கும் தருவாயிலும்
இனமானம் காக்கப் போராடத் துடிக்கும்
அந்த ஈழ மக்களை பற்றி சிந்தியுங்கள்.

ன்னிப் போரில்
முல்லைவாய்க்கால் போரில்
இந்த அறுபது வருட காலத்தில்
இழந்த இழப்பை
ஒருதுளியும் –
யாரும் மறந்துவிடாதீர்கள்.

ராஜபாட்டையில் மிடுக்காய் நடந்த
தமிழினம் – இன்று
விமான நிலையத்தில்
கிடைத்த உடுப்பை உடுத்தி
கிடைக்குமிடம் தேடி
அலையும் உயிர் பயம்
எத்தனை வேதனைக்குரியது என்பதை
கவனத்தில் கொள்ளுங்கள்.

மூக்கு சதை கிழிந்து,
கைகால்கள் நொறுங்கி,
ஈ மொய்க்க மொய்க்க
அருகருகே கிடத்தப் பட்ட
இறந்தவர்களுக்கருகே படுத்துறங்கிய,
காகிதமாய் கொட்டி எரித்த பலரை
கண்ணெதிரே பார்த்து பார்த்து
உயிர் போகும் வலியில் துடித்த
லட்சாதி லட்ச உறவுகளுக்காய்
ஒரு சொட்டு கண்ணீர் வேண்டாம்
வேறென்ன செய்யலாமென சிந்தியுங்கள்.

மிழருக்கான ஒரு தேசத்தை
கனவு காணுங்கள்.

மீண்டும் மலரும் தமிழீழத்தில்
இறந்தவர்களின் சமாதி தாண்டி
மிட்சம் மீந்தவர்களையாவது
வாழவைப்போம்.

தமிழரின் வாழ்வை
ஈழத்தினால் –
உலகிற்கு போதிப்போம்!!
——————————————————————
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 4 பின்னூட்டங்கள்

போராடுவோம்; போராடுவோம்!

மாவீரர் நாள்!
இறந்தவர்களின் சமாதிகளை
நனைக்கிறது கண்ணீர்,
சமாதிக்குள்ளிருந்து எழுந்து
கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு
துப்பாக்கி தூக்கி
சல்லடை சல்லடையாக்கி
சிங்களரை விரட்ட
ஈழம் மீட்க
துடிக்கிறது கைகள்.

இயற்கையின்
கட்டுப்பாட்டிற்குள்
அடங்கி போனதால்
இனி புதியதாய் பிறக்க
திட்டமிடுகிறார்கள் போல்,

சமாதிகள்
அமைதியாகவே
காட்சியளித்தன.

வருந்தாதீர் உறவுகளே,
மாவீரர்கள் –
அன்றும் உறங்கவில்லை
இன்றும் உறங்கவில்லை
இறப்பு தொலைத்து பிறப்பார்கள்.

விடுதலைக்காய் உயிர்விட்ட
ஒவ்வொரு உடலின் துளி ரத்தமும்
உயிராய்.. தமிழை.. உணர்வாய்..
நமக்குள் கலந்து –
புதியவர்களாய் நம்மை
புதுப்பிக்கட்டும்.

வாருங்கள் புதியவர்களாய் புறப்படுவோம்
ஈழம் காப்போம்
பறக்கும் புலிக்கொடியின்
அசைவுகளில் வீசும் காற்றில்
மாவீரர்களின் ஆத்மா
அதன் பின் அமைதியுரட்டும்;
அதுவரை போராடுவோம்!
————————————————————-
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

நற்செய்தி! நற்செய்தி! சில கவிஞர்களை பற்றி..

சில கவிஞர்களை பற்றி, தமிழக அரசின், இணைய பல்கலைகழக பட்டம் பெறுவதற்கான பாடத்தில் எழுதப் பட்டுள்ளது. அதில் நம்மை பற்றியும் குறிப்பிட்ட பாடத்திட்ட நிர்வாக குழுவிற்கும், பாட ஆசிரியர் முனைவர் கு.மகுடீஸ்வரன் அவர்களுக்கும், உங்களுக்கும், கடவுளிற்கும், முகில் பதிப்பகத்திற்கும் நன்றி!

எத்தனை கால உழைப்பு., எத்தனை இரவுகளின் தூக்கம் விழுங்கிய அங்கிகாரம். எனக்கொன்றும் பதவிக்கும் விருதிற்கும் பெருத்த ஆசைகளில்லை. ஆனால் எங்கேனும் ஒரு விருது கிடைத்துவிடாதா என தென்படும் விருதிற்கெல்லாம் அனுப்ப முயற்சிப்பேன், அண்டை தேசத்தில் வசிப்பதால் அது கூட இயலாமல் போகும்.

அதற்கான அவசியம் விருதை பெற்றுக் கொன்டாடுவதற்கல்ல. இப்படியும் ஒருவன் நமக்காய் எழுதித் திரிகிறான் என்றறிவிக்க மட்டுமே.

அந்த ஒரு அவஸ்த்தை இந்த ஒரு ஆறுதலில் தீர்ந்து போனது. நான் செய்வது எத்தனை சரியென்பதே என் கேள்வியும், பயணத்திற்கான முடக்கமுமாக இருந்துவர; தற்போது என் பயணம் இப்படியே தொடரலாமென்ற தகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு மீதியை கடவுளின் செயலென விட்டு விடுகிறேன்.

அனைவருக்கும் நன்றி!!

//தோழர்களுக்கு வணக்கம்,

இணைய பல்கலைகழக பாடத்தில் ஐயா அறிவுமதி, இலக்குமி குமாரன், ஞான திரவியம், என்.டி.ராஜ்குமார், மகுடேஸ்வரன், மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா, சுகந்தி சுப்பிரமணியம், குட்டிரேவதி, வெண்ணிலா, உமா மகேஸ்வரி மற்றும் நம் வித்யசாகரை பற்றியும் மிக சிறப்பாக குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

இது தங்களின் தெரிவிற்கான மின்னஞ்சல்.

பார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியை சொடுக்கவும்:-

http://tamilvu.org/courses/couindex.htm

பின், பாடங்கள் சொடுக்கவும் ~ DO414 புதுமை இலக்கிய வகைமையும் வடிவமும் சொடுக்கவும் ~ DO4142 கவிதை மரபும் மாற்றமும் சொடுக்கவும் ~ பாட அமைப்பு சொடுக்கவும் ~ 2.5 தொண்ணூறுகளுக்குப் பின் கவிதைகள் சொடுக்கவும் ~ 2.5.1 மண் சார்ந்த கவிதைகள் முழுதையும் படிக்கவும்.

நன்றிகளுடன்..
முகில் பதிப்பகம் //

Posted in அறிவிப்பு | 16 பின்னூட்டங்கள்

சிவதீபனுக்கோர் சபதம் கேள்!

ன்னித் தீவின் தளபதியே
நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே
ஆணையிரவில் ஆணையிட்டு –
புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா???

எல்லி நகைத்தவரிடம்
சொல்லி அடித்த வீரமே
இருபத்தைந்து ஆண்டில்
புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா???

சிங்களனாயிரம் சங்கருத்து
முல்லைத் தீவுபிடித்து
புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு
பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா???

ஈழ கனவு சுமந்து
போராட்ட நெருப்பு குழைத்து
வீரமறவர் குருதிகளந்த மண் அணை கட்டி
கிளிநொச்சியை காத்த மாவீரா – கேட்கிறதா???

அர்ப்பணிப்பு, வீரம், உறுதிக்கு வலு கூட்ட
வடப்போர் முனையில் நின்று
பரிசளிப்பு விழா நடத்தி – வீரர்களின் நெஞ்சுக்கு
பேச்சுரம் பாய்ச்சிய கட்டளை தளபதியே – கேட்கிறதா???

அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபனே;

இதயம் முழுதும் ரத்தமின்றி
பெற்ற உற்ற உறவுகளின்றி
ஒற்றை மரமாகவேனும் நிற்போம்,

நினைவில் எமை மறந்தும் ஒழிப்போம் –
உனை மறவோம் கேள்;

ஈழமுள்ளவரை நீயிருப்பாய்
உன் நினைவற்று போகும் முன்
ஈழம் படைப்போம்!

வெள்ளையப் படைக்கு சிக்குண்டு மாய்ந்த
இந்திய மரணங்களை மறந்து
ஈழத்தில் – அடிமை சங்கிலி பூட்ட புகுந்த
அமைதிப் படையென்ன –

ஆயிரம் படை வரட்டும்;
எப்படை வரினும் எம் படை வெல்லும் தினம்
உனக்கே உனக்கே உரித்த-தெம் சபதம் கேள்!!!
———————————————————————-
வித்யாசாகர்

குறிப்பு: கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட
தீபனின் இயற்பெயர்: வேலாயுதபிள்ளை பகீரதகுமார். இயக்கப்பெயர் சிவதீபன்.
இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக