என் ஜன்னலோரத்தில்.. ஈழம்!

ன் ஜன்னலோரத்தில் நுழைந்த சப்தம்
காதை எரிக்கையில் –
ஜன்னல் திறந்து – சற்று வெளியே பார்க்கிறேன்

அதோ –
ஈழமொரு சொட்டு நம்பிக்கையில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது,
உலகம் எங்கோ தன் தலையை திருப்பி
வலியவன் தோள் தேடி அலைகிறது,
ஓடி –
ஒரு வார்த்தை ஏனென்றுக் கேட்டிடவோ –
என் உயிர் தந்து தேசம்
மீட்டுமுணர்வை கூட்டவோ
தினவற்றுப் போனேனே;

நாட்கள் நகர்ந்து –
ஈழம் விட்டெங்கோ போகும் வேகத்தால்
சுயம் வெட்கும் ஆளானேனே..

ஈழம் பற்றி செய்தியின்று
அமைதி கொண்டு போனதுவோ???

அமைதி விழுங்கிய மயான கனத்தில்
எம்பாட்டன் முப்பாட்டன் பிள்ளை வரை
தமிழ் ஜாதி புதைந்துப் பழசாகிப் போனதோ???

வரலாறு தன் பொன்னேட்டில்
வியந்து பதித்துக் கொண்ட இனமிங்கே
புல்பூண்டு முளைத்து வெடிசப்தங்களை மட்டும்
நினைவுகளாய் காதுகளில் பதிந்துகொண்டனவோ???

தமிழன் வென்ற இடத்திலிருந்து
பயம் கொண்ட உலகமிது – நமை
மென்று விழுங்கி ஏப்பமிடுகையில்
சிங்களனென்று சொல்லத் துடிக்கிறதோ???

உலகின் பார்வையில் –
உதவியற்றுப் போனாலென்ன ,
உயிர் அறுக்கும் கொடுமை கண்டு
தடுக்கும் மனிதமற்றுப் போனதே, கொடுமை.. கொடுமையில்லையா???

காடுகளில் என் இனம்
திரிந்த வலி போகட்டும்,

வருடங்களில் வாழ்வை தொலைத்து
அற்ப வெடிக்கு உயிர் துறந்த
போராளிகளின் தியாகம் போகட்டும்,

பால் சுரந்து காட்டில் பீய்ச்சிட
வெறும் வீடு வளர்த்த பிள்ளைகளையும்
சிங்களர் சுட்டுக் கொன்றது போகட்டும்,

விடுதலையென்னும் ஒற்றை வார்த்தை சுமந்து
பள்ளிக்குச் சென்ற குழந்தைகளையெல்லாம்
பதுங்குக் குழியில் தள்ளி எரித்தார்களே ஈனர்கள், போகட்டும்

கைகட்டி மரமாக்கி
கண்முன்னே கற்பழித்த தாய் தங்கை
யாரானாலென்ன போகட்டும் போகட்டும்,

இன்னும் என்னென்ன போகவோ எம்-பிறப்பு.. மானிடமே???

சுட்டுக் கொன்று மேலேறி
முலையருத்து –
வெற்றி சங்கூதிய போர்நெறி காத்த சிங்களரா
நீதி கொண்டார்??????????

எந்த நீதி எந்த கடவுள்
எவர் வந்து எமை காப்பவரோ…

எல்லாம் அற்று போய்
தனியே நின்று மயானம் வெறித்து
எங்கேனும் என் தாயின் உறவுகளின்
ஏதேனும் ஒரு அடையாளம்
என்ன ஆனார்களென்றாவது பதிந்திருக்காதா என
தேடும் அவகாசமின்றி
நரிக்கூண்டில் அடைப்பட்ட எமை
எவர் வந்து காக்க இனி?????

எவரும் வேண்டாமென
உயிர்களை துறந்த ஒரு பிடி மண்ணெடுத்து
ஓங்கி வெளியே வீசிவிட்டு –
ஜன்னலை மட்டும் இழுத்து சாற்றிக் கொண்டேன்!
——————————————————————————
வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 51

நீ அழுகின்ற ஒருசொட்டுக் கண்ணீருக்கு
என் உயிரு உருகுதடி; இப்படி
இரவில் அழுது தீர்த்த வருடங்களெல்லாம்
நமக்கு வாழக் கிடைக்காத வாழ்க்கையடி…!

ரவு மூணு மணிக்கும் நாளு மணிக்கும்
சூரியன் வரமாலேயே – பொழுது விடியுதடி;
இரவு பத்தோ-பன்னிரண்டோ ஆனாக்கூட
உன் நினைவில் உயிருருக –
தூக்கமெல்லாம் எங்கோ மறைந்து தொலைக்குதடி!

நீ பேசும் குரல் கேட்க – குவைத்தின்
மாதச் சம்பளத்தில் பாதி குறையுதடி; இடையே
பேசமால் சேர்தனுப்பிய பணத்தில் உயிர்மெல்ல-உயிர்மெல்ல
விலகி ஆயுளைப்பாதியாய் குறைக்குதடி!

தெருவெல்லாம் நடந்து திரிகையில் – உன் நினைவில்
காற்றாய் கரைந்து – நேரங்கள் வருடமாய் நகருதடி;
வீட்டில் வந்து படுக்கையில் விழ்ந்தாலோ
நொடிகளெல்லாம் யுகமாய் காமச்சூட்டில் வேகுதடி!

கைத்தட்டி-வாய்பொத்தி- புலனடக்கி வாழுகையில்
இதற்குத்தான் வழ்கையான்னு
மனசெல்லாம் வலிக்குதடி;
காலமிட்ட சாபமிது ‘பிரிவின் வேதனை’ முற்றிலும் நரகமடி!

நீயும்-நானும் பேசிய கதைகளாயிரம்
நித்தமும் நினைவில் இனிக்குதடி;
நீயழைக்கும் ஒரேவொரு ‘என்னங்க’ கேட்க
வருடங்களிரண்டு கொள்ளுதடி.. கொல்லுதடி!!

நான் உதைத்த உதையின் ‘வலி’
என் தாயின் வயிறறியுமா தெரியலடி;
நம் பிள்ளை உதைக்காமல் வலிக்கும் வலி
அவனைப் பிரிந்தபின் தான் உரைக்குதடி!

வன் பேசும் பொற்சித்திரம் போல்
கையசைத்துக் கொஞ்சிச் சிரிக்கும் கடவுளோடி;
நீ வயிற்றில் சுமந்த பத்துமாதம் – நான்
மனதில் சுமந்த ‘வாழ்வின் அர்த்தமடி!’

வன் பிறந்த சேதியை – தொலைபேசியில் கேட்டு
சிரிக்க முடியாமல் அழுதது ‘கொடுமையடி;
அவன் ‘அப்பா!’ என்றழைத்த – முதல் குரலை
நான் தொலைபேசியில் மட்டும் கேட்ட பாவியடி…!!
——————————————————–
வித்யாசாகர்

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

அனைவருக்குமோர் நற்செய்தி!

கவிதை மலர்களாய் உதிர்ந்த கண்ணீர் பூக்கள்..

ப்பிரிவுக்குப் பின் கவிதைகளனைத்தும் “பிரிவுக்குப் பின்” புத்தகத்திலிருந்தே பதியப் படுகின்றன. புத்தகம் வாங்க விரும்புவோர் குவைத்தில் (00965) 67077302 என்ற எண்ணிற்கும், சென்னையில் 25942837, 9786218777 என்ற எண்களுக்கும் தொடர்பு கொண்டு புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். புத்தக விலை, ரூ. 70

இப்புத்தகங்களின் மூலம் வரும் வருமானங்களை உதவியின்றி தவிப்போருக்கு உதவவே பயன் படுத்துகிறோமென்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

முகில் பதிப்பகத்தின் முதல் வெளியீடு இந்த ‘பிரிவுக்குப் பின்’ எனினும் நூலழகு படுத்திய தமிழலை இஷாக்கிற்க்கும், தொடர்ந்து என் எழுத்தின் பாடுபொருளாகவும் பலமாகவும் இருந்துவரும் உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல உரித்தாகட்டும்.

பணிவன்புடன்..

வித்யாசாகர்

Posted in பிரிவுக்குப் பின்! | 10 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 50

ழை பெய்த
ஈரத்துணி வாசத்தில்
மணக்கிறது –

நீ என் தலை துவட்டிய
உன் –
ஈரப் புடவையின் வாசம்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 49

ன் அலமாரியில்
அடுக்கி வைத்திருந்த
உன் –

விட்டு சென்ற சுடிதார்களை
பார்க்கையில் தெரிந்தது;

உன்னை விட்டிருப்பது
எத்தனை கடினமென்று!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்