வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 914,226
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (890)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

நவம்பர் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..
இந்த உலகத்திற்கு
அழகற்ற
நிறைய கண்களுண்டு,
ஆணென்றும்
பெண்ணென்றும்
தூக்கி இறக்கி
தூக்கி இறக்கி
நம்மை அசிங்கமாகவே பார்த்துக்கொண்டிருக்கும்,
ஒவ்வொரு வட்டமாய்
நாம் ஓடி ஓடி வந்துநிற்க
உன்னையோ
என்னையோ
கீழ்தள்ளியே கைக் கொட்டும்
இருவர் காதுகளிலும் வந்து
இருவருக்கும்
தோல்வியையேச் சொல்லித்தரும்
எல்லோரும்
உலகத்தின் பின்னாலையே
ஓடுகிறார்கள்
நாம் தான் காதலிக்கக் கற்றுக்கொண்டோமே
நம் காதல் பார்
ஒரு படி மேலேறி
அதோ அந்த உலகை
நமக்குக் கீழிருப்பதாகவே காட்டுகிறது..
——————————————————————–
வித்யாசாகர்
Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்
Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)

பாகுபாடில்லா சமுதாயமே மேன்மையைத் தரும். இது நீ அது நான் எனும் பார்வை மாறனும். இது நாமென்றுக் காட்டுவதில்தான் எத்தனை அன்புண்டு. அதை மானிடர் அனைவரிடத்தும் வேண்டணும்.
எதில் வேற்றுமையில்லை இரு மனிதர் நேராகச் சந்தித்தால் பல மாறுபட்ட எண்ணங்கள் தோன்றும்தான், அதே அருகருகில் அமர்ந்து பேசினால் அங்கே தோழமை மலரும்.
இதுவரை வாழ்ந்தவர் எப்படியேனும் வாழ்ந்துபோகட்டும், எதையும் மன்னித்துவிட்டால் கோபம் தீர்ந்துவிடும். கருணையை நிரப்பிக்கொண்டால் அன்பு சுரந்துவிடும். அன்பில் மலரும் உறவுகளிடத்தே மேல்கீழ் இராது. இருக்கக்கூடாது. வாழ்வதை வரமென்று எண்ணி எல்லோருக்கும் பொதுவாக நிறைவாக வாழ்வோம்.
அடிப்பட்டவருக்கு வலிக்கும்தான் அதற்கு திருப்பியடிப்பதைவிட மன்னித்துப்பார். மன்னிப்பதைவிட ஒரு பெருந்தோல்வியை எதிராளிக்கு கொடுத்திடமுடியாது. மன்னிப்பதுவே இறைத்தன்மை. மன்னிப்பதற்கும் கண்டிப்பதற்கும் காரணம் சமநிலை ஒன்றாக இருப்பதுவே தர்மம். நீதி. இந்த இரண்டிற்கும் நடுவேக் கொஞ்சம் அன்பை வைத்துக்கொள்.
அன்பிருக்கும் இடத்தில் மேல்கீழ் உடையும். அந்த அன்பைக் கூட நாம் சாதிக்குக் கீழ்நின்றும் மதத்திற்கு கீழ்நின்றும் காட்டுவதால்தான் பேசுவதால்தான் தீண்டாமை இன்னும் கருக்குலையாமல் அப்படியே இருக்கிறது. அதன்பொருட்டே நாம் காலத்திற்கும் ஒரு பக்கம் சரியாகவும் மறுபக்கம் தவறாகவும் தொடர்ந்து தெரிந்துவருகிறோம்.
அன்பை அடிமனதிலிருந்து எல்லோருக்கும் பொதுவாய் காட்டுங்கள், எனது.., நான்தான், என்னிடந்தானெனுமந்த தானென்பதை உடைத்தெறியுங்கள், அங்கே நாமென்பது தானே உருவாகும்.
ஒரு வீட்டில் அண்ணன் வேறாக தம்பி வேறாக இல்லையா? அதுபோல ஒரு மண்ணில் வாழ்தல் அவரவருடையதாக இருந்துபோகட்டும், மொத்தத்தில் வாழ்பவர் நாம் மனிதர்களாக வாழ்ந்துமடிவோம்.
நம் மரணம் இம்மண்ணின் மலர்ச்சிக்கான விதைகளாய் நாளை பொதுவாக விளைந்துவரட்டும்..🎶
பேரன்புடன்..
வித்யாசாகர்
Posted in வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்
Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
உங்களுக்கு மழை வேறு; எங்களுக்கு வேறு..
இதோ இந்த மழைத்துளிகளில்
சொட்டுகிறது அந்நாட்களின் நினைவு..
மணற்பூக்களும் செம்மண் ஆறுகளும் ஒடி
பனைமரக் காடுகளுக்கிடையே மழைத்தெருக்கள் மணத்த
சுகநாட்கள் அவை..
தெருவோரம் தேங்கிய வீடுகளைக்
கடந்துப்போகும் மழைநீரில்
எங்களுக்கான விடுமுறையைக் கப்பலாக்கித்தந்த
ஒரு நட்பினிய மழைக்காலமது..
ஒரு தும்பியின் வாலில் பூமிப்பந்தினைக் கட்டி
பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் வானத்தை போர்த்திவிட்டு
இந்த பிரபஞ்சத்தை கண்மூடி கண்மூடித் தாண்டிய
பொன்-நிலா பொழுதுகள் அவை..
கிளை ஒடிந்ததா மரத்தை வெட்டு
வீடு சாய்ந்ததா இடித்துப் போடென
போட்டவர்களுக்கு மத்தியில்;
மரத்தில் அதுவரை வாழ்ந்திருந்த குருவிக்கும்
வீட்டில் கூடுகட்டியிருந்த சிலந்திக்கும்
மாற்று யாசித்து மழையோடு அழுத மழைக்காலமது..
மழைக்கு வீடுபூட்டி
வெறும் சன்னலில் கைநீட்டி நனைந்தால்
மழையொரு மாயாஜாலம்தான்,
நிலா தெரியும் குடிசைகளுக்கு மழைவந்தால்
நொடிப்பொழுதும் ஈரத்தின் கனப்பொழுதாகும்,
மழைநீருக்குமுன் –
கண்ணீரில் வீடு குளமாகும்..
வீடெல்லாம் மழை மழைமழையாய்
பொழிந்துக்கொண்டிருக்கும்..
பொருக்கி வைத்திருந்த வரட்டியும் சுள்ளியும்
தங்கம் போல் விலையாகும்.,
பழையசாதம் கூட
எனக்குஉனக்கு என்று மாறும்,
போன மழைக்கு வாங்கிய மருந்தை
நினைவுற்று நினைவுற்று காய்ச்சலும்
தலைவலியும் மாறி மாறி தேடச் சொல்லும்.,
கத்தரிக்காய்க் கேட்டால் –
கடல்பாசிக்கு விலை சொல்வார்
தெருமுனைக் கடைக்காரர்.,
கொஞ்சம் உப்பு கடன் கேட்டால்
வாங்கிய சர்க்கரைக்கு கெடு கேட்பார்.,
அரிசி பருப்பு வாங்கவே
அண்டா குண்டானெல்லாம்
அடகுக்குப் போகும்,
கூரைவீட்டு ஏழைப் பணத்தை
வட்டிப்போட்டு உறிஞ்சும் அட்டைகள்
மழையிலின்னும் கூடிப்போகும்,
ஒரு காசு கூட்டிக் கேட்டால் – கேவலமாய்ப் பல்லிளிக்கும்
வீட்டில் வந்து –
அழகு முகத்தைக் கண்ணாடியில் பார்த்தால்
பித்தளைக் கம்பல் பீலா விடும்
சுருட்டுமுடி ச்சீ போ’ன்னும்
அவன் சிரித்த முகம் நினைவிற்கு வந்தால்
பளீரெனக் கண்ணாடி உடையும்,
பசியும் பரிகசிப்பும் மழைவந்தால் கூடவருமென்று
எல்லோருக்கும் எப்படிப் புரிய?
காலம் வேறு வேறாக மாறுகிறது
எது மாறினாலும் –
தனது கோர முகமாக
ஏழைகளை வைத்துக்கொள்கிறது,
ஏழைகளுக்கு முகம் கிடையாது
ஏழைகளுக்கு மழையின் இன்பம் கிடையாது
ஏழைகள் சரிசமமானவர்களில்லை இந்த சமூகத்துள்
ஏழைக்கு துணி கிழிந்திருந்தால் கேடில்லை
ஏழைக்கு நோய் வந்தால் உதவ நாதியில்லை
ஏழைக்கு கோபம் வரக்கூடாது
ஏழைக்கு பசியெடுக்கக் கூடாது
ஏழைக்கு ஆசை இருக்கக் கூடாது
பாவம்; காலத்திற்கு மிக ஏழ்மையான மனசு..,
மனசும் நனையும்
மழையில் மட்டுமே நனையும் மனிதர்களுக்கு மத்தியில்
எங்களின் மனசும் நனையும்
மழையில் மட்டுமல்ல –
மழைக்குப் பின்னும் இப்படி மழையை நினைத்தாலே
மனசு நனையும்,
மழையில் பால்வாங்கி
மழையில் முறுக்கு வாங்கி
மழையில் சூடாக சூப்பு வைத்து குடிப்பவர்களுக்கு
மழையில் பால் விற்றவர்
மழையில் முறுக்கு சுட்டு விற்பவர்
மழையில் கீரை சுமப்பவரைப் பற்றியெல்லாம்
நினைவு வரவேண்டும்
வராதவரை மனசுகள் இப்படிக் கண்ணீராலும் செந்நீராலும்
நனைந்துக்கொண்டு தானிருக்கும்.,
என்றாலும் மழை அழகு
மழையொரு வரம்
மழைக்கு பகைவர்களில்லை
மழை பாகுபாடு பார்ப்பதில்லை
மழைக்கு மேல்கீழ் கிடையாது
மழையை நாம் தான் வரமாகவும் சாபமாகவும்
மாற்றிக் கொள்கிறோம்.,
உண்மை தான்
உண்மையிருக்கட்டும் –
ஓட்டைக் குடிசைகளில்
எத்தனைத் தட்டிருக்கும், குவளை இருக்குமென
யாருக்கேனும் தெரியுமா?
சொட்டும் மழைத்துளியை
பிடித்து நிரப்பவேனும் வீட்டில்
பாத்திரங்கள் வேண்டுமென
வேகமாய் –
புயலோடுப் பெய்யும் மழைக்கு
ஒரு துளிகூட தெரிவதில்லைதான்..,
அவைகளைத் தாண்டியும் மழையழகு
மழைக்கு பேசத் தெரிந்தளவிற்கு
இசைக் கொட்டி பாடத் தெரிந்தளவிற்கு
எங்களைத் தெரியாது,
மழைக்கு நாங்கள் ஒதுங்கியது கிடையாது
ஒதுங்க எங்களுக்கு அன்றெல்லாம் –
சுடுகாடு மட்டுமே தயாராகயிருந்தது..
அன்றும் மழைவந்தால் மின்சாரம் போகும்
மழை மீண்டும் தொடர்ந்தால் மாடுகள் நோகும்
மறுநாளும் மழையென்றால் –
முந்தையநாள் சோறும்
முன்னிரவோடு தீர்ந்திருக்கும்,
பானையில் நீர் நிரப்பி வைக்கலாம் –
பசியில் வயிற்றைக் கட்டிவைப்பது பெரும்பாடு,
அடுப்பில் வெருந்தட்டை மூடலாம் –
அழும் பிள்ளைகளின் வாயை
அடியால் மூடுவது ஆக வேதனை,
சோறாவது சரி வயிற்றின் பாடு
இருட்டிற்கு ஒளி யார் தருவார் ?
குடிசைக்குள் பாம்பிருக்கா
நாய் நரி படுத்திருக்கா யாரறிவார்?
காற்றிற்கு விலைவைக்கும் தேசம்
தண்ணீரை விலையாக்கிய தேசம்
சோற்றிற்கும் சாதிப் பார்க்கும் தேசம்
இருட்டிற்கு ஒளி தருமா ?
சிமிலி விளக்கிற்கு மண்ணெண்ணையைத் தேடி
வீடு வீடாய் அலைவோம்..
இன்றும் சரி
அன்றும் சரி
பெரிய வீடுகளுக்கு
மழையொரு பொழுதுபோக்கு தான்,
மழைவந்தாலே மண் மணக்கிறதோ
இல்லையோ சமையலறை மணக்கும்
வீடு நனைகிறதோ இல்லையோ
நாக்கு எச்சிலில் நனையும்,
சில வீடுகளில் சூடாக பூரி போடுவார்கள்
தெருக்கடைகளில் பஜ்ஜி போடுவார்கள்
பணமிருப்பவர்களுக்கு எக்காலும்-
எல்லாமும் கிடைக்கும்,
நாங்கள் வெறும் மண்ணெண்னைக்கே
வீடுவீடாய் அலைந்துக் கொண்டிருப்போம்..,
வெளிச்சம் கிடைக்கவே
வெள்ளிக்கு தவமிருப்போம்..,
மழை அன்றும்
மழைமழையாய் மழைமழையாய்ப் பெய்யும்
இடிகூட இடிக்கும்
அந்த இடிகூட எங்கள் தலையில் விழாது..
மழைக்கென்ன தெரியும், மழையொரு
மனுநீதிச் சோழனைப்போல,
எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான்
மழையும் ஒன்றுதான்
எல்லோருக்கும் ஒரு மழை தான்
அனால் அந்த மழைக்கு கீழேதான்; அன்றும் சரி
இன்றும் சரி
நனைபவர்கள் நாங்களாக மட்டுமே இருக்கிறோம்!!
—————————————————————
வித்யாசாகர்
Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்
Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
10, யாரிங்கே மாறுவது; முதலில் நீ மாறு..
உடைந்தத் தார்சாலையினைப் போல
மனது ஆங்கங்கே
குழியும் குறையோடும் தான் இருக்கிறது..
மனது ஆங்கங்கே
குழியும் குறையோடும் தான் இருக்கிறது..
மேலேறிச் செல்லும்
காலத்தின் நாகரீக நாற்றமோ
மரணத்தை மாத்திரைக்குள் அடைக்கிறது..
உண்ணும் உணவில் நஞ்சு
உடையில் தீ
உறங்கும் இரவில் வெளி யெங்கும் சாபம்
தண்ணீர் விலைக்கு கிடைக்கும்
காற்று காசுக்கே நிரம்பும்; கனவெங்கும்
புண்ணென நோகு(ம்) அரசியலே நமையாளும்
பேச்சில் கவுச்சிவாசம்
பார்வையில் பொய்வெளிச்சம்
வாழ்தலை மேல்கீழாகவே சித்தரிக்கும் அறிவு
எல்லாம் மருந்திட்டு
பழுத்திட்ட பழங்களைப்போல
பணத்திற்கு மட்டுமே –
உறங்கியெழும் வெம்பிய வாழ்க்கைப்பயணம்
நெஞ்செல்லாம் நெருப்பேறி சுடும்
காமத்தை வெல்வதற்குள் வாழ்க்கை
பல்கொட்டி சொல்லறுந்துப் போகிறது
பொறாமை பெருங்குற்றமல்ல
அதை யார்மேல் காட்டுவதென தெரியவே
முடி நரைத்து உறவருந்துவிடுகிறோம்
சாதி உதிர்வதற்குள் மதம் புரிவதற்குள்
மயானத்தில் குழிவெட்டி – வெறும்
மண்ணும் சதையுமாய் தீர்ந்துப் போகிறோம்
ஆசை, காண்பதன்மீதெல்லாம் ஆசை
ஆசையில் நைந்து நைந்தே
எண்ணக் கிழிசலில் மரணம் படிந்துவிடுகிறது
எல்லாமே தனக்கு வேண்டும்
எல்லாவற்றிலும் தன் பெயர் வேண்டும்
எது செய்தாலும் நான் செய்தேன்
பிறகு யார் யாருக்காக வாழ்வதிங்கே?
இந்த நொடி
இந்த பிறப்பு
இந்த வாழ்க்கை வானத்தையும்
பூமியையும் மிஞ்சியது
அமிலம் பொங்கும் கடலுள்
அன்பெனும்
ஒரு புள்ளியிலிருந்து பிறப்பது
அமிலத்தில் குளிர்வதும்
அன்பினால் பூப்பதும் இதோ இனி உன் கையில்..
————————————————————————-
வித்யாசாகர்
Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்
Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
நோகும் நிலங்களும் நெஞ்சடைக்கும் சாபமும்!!
அம்மணத்தில் வேகுதய்யா
உயிரறுந்துப் போகுதய்யா,
நிர்வாணம் நோகுதய்யா
நொடி நொடியாய் வலிக்குதய்யா;
ஆண்டாண்டா உழுத நிலம்
சுடுகாடா மாறுதய்யா,
சேர்த்துவைத்த விதநெல்லு
விசமேறித் தீருதய்யா;
பச்சை வயல் வெடித்ததுமே
பாதி சீவன் செத்துப்போச்சே,
மிச்சப் பானை உடைந்ததுமே
உழவன் உயிர் கேளியாச்சே;
சேறு மிதித்து சோறுபோட்டும்
ஊருசனம் சேரலையே,
ஏறு பிடித்து உழுத கைக்கு
இன்னொரு கை கூடலையே;
வியர்வையில் விளைஞ்ச நெல்
உயிர்குத்தி வருத்துதய்யா,
உழவனா பிறந்ததை – எண்ணி
உயிர்விட துடிக்குதய்யா;
காசுக்கு அலையாத சனம்
பசிபசிச்சு குடி சாயுமா?
காலம் நின்று கொல்கையில்
கைகுட்டையில் மானம் மூடுமா?
வித்த நிலம் ஒட்டு நிலம்
விசம் வாங்கப் பத்தலையே?
உயிர்விட்ட சனங் கூட
வாழ்ந்தொன்றும் சாகலையே?
ஊர் ஊரா பாயுந் தண்ணி
உள் நாக்கை நனைக்கலையே?
கட்டிடமா உயரும் பணம்
ஒத்த மார்பை மூடலையே?
கிளி பறிக்கும் சீட்டாட்டம்
ஒவ்வொன்னா போகுதையா,
உழவன் போன தெருப்பார்த்து – நாளை
வளமுஞ் சேர்ந்துப் போகுமையா;
வெறும்பய ஓலமுன்னு
அரசொதுங்கிப் போகுதே,
அடிமாட்டு விலைவைத்து
நாட்டுமக்கள் பேசுதே;
கோழைகள் இல்லைன்னு
யாருக்குச் சொல்லியழ?
சோம்பேறி இல்லைன்னு
எங்கேபோய் தீ மிதிக்க??
ஒத்த வயிறு பசிக்கு
ஒத்த வார்த்தை பேசலையே;
மொத்தப் பேரும் போகையில
விடாத சாபம் பளித்திடுமோ ??
எம் புள்ள படிச்சிருவான்
பெரிய ஆளா நின்னிடுவான்,
உன் பொழப்பு என்னாகும்
உழவன் உண்டான்னு ஏலம்போடும்;
உலகெல்லாம் பேயாளும்
பசிநெருப்பில் வயிறெரியும்,
ஒத்த நெல்லை தேடித் தேடி
நாளை சுடுகாட்டில் விவசாயம் பிறக்கும்!!
————————————————–
வித்யாசாகர்
Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்
Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக






















