35, இலைகள் அசையா மரம் பற்றியும் மனிதன் பற்றியுமான கவலை..

1
ரம் விரிச்சோடிக் கிடந்தது
காற்றேயில்லை
கயிறு கட்டிலை நம் தாத்தாவோடு நாம்
எரித்திருத்தோம்!
—————————————————————————–

2
ரம் வெட்டி மரம் வெட்டி
மரவெட்டியானான் மனிதன்;
மனிதத்தையும் மரத்தோடு வெட்டியிருந்தான்!!
—————————————————————————–

3
மி
ன்னல் விழுந்து
பனைமரம் எரிந்துபோன கதையெல்லாம்
இப்போது நடப்பதில்லை;

பனைமரம் வெட்டப்பட்டபோதே
மின்னலையும் நிறைய வெட்டிவிட்டோம் நாம்!
—————————————————————————–

4
ரு மரம் வெட்டினேன்
காக்கை குருவிகள் வீடிழந்து அலைந்தன,
இன்னும் பல மரம் தேவைப்பட்டது

எனக்கான  ஒரு வீடுகட்ட..
—————————————————————————–

5
ழை வரவில்லை அழுதோம்
மழை வந்தது அழுதோம்
மழை;
அழுகைக்கும் பாடுபொருள்!!
—————————————————————————–

6
ழைக்குத் தெரியாது
வந்து வந்து போகும்போது
எத்தனைப் பேர் இருக்கிறோம்;

எத்தனைப்பேர் இல்லையென்று..
—————————————————————————–

7
பு
யல்  வீசி மரங்கள் சாய்ந்து
பல உயிர்கள் அழிந்து
மனிதர் செத்தது மட்டுமே செய்தியில் சொல்லப்பட்டது;

மற்ற உயிர்களுக்கு
கையிருந்தும்
காலிருந்தும்
பசியிருந்தும்
வலியிருந்தும்
வாழ்க்கையிருந்தும்
மனிதனுக்கு பெரிய பொருட்டாக அது தெரியவில்லை

மனிதன் தனக்கான கொலையைத் துவங்கிய இடம்
இப்படி தன்னைமட்டும் பெரிதாகக் காத்த இடமாகயிருக்கலாம்
அல்லது பிற உயிர்களையொரு –
பொருட்டாகக் கூட எண்ணாதக் குற்றமாயிருக்கலாம்..
—————————————————————————–

8
ழை பெய்ததான நினைவு
மண்வெட்டியெடுத்து தரையில் கொத்தினேன்
பாறையென இறுகிய மண்
இன்றையச் சோற்றில் விழ –

குழந்தைகளின் வயிற்றில் கைவைத்துக் கொண்டு
இரவின் இருட்டிற்குள் விழுந்தோம்,

ஒருவேளை மழை நாளைக்கும் வராதுயெனில்
மண்வெட்டிகள் நாளை நிறைய அவசியப்படலாம்

கொண்டுவாருங்கள்..

மழை பின்
மற்றவர்களுக்கேனும் பெய்யட்டும்!!
—————————————————————————–

9
ரத்தை வெட்டி
வீட்டைக் கட்டினோம்
அந்த வீட்டில் பிறந்த குழந்தைக்குத் தெரியாது
அந்த வீடு
மரத்தின் இடமென்று!!
—————————————————————————–

10
ட்சத்திரங்கள் நிறைய இருந்தன
அதில் ஒன்று அம்மாவாகவும்
இன்னொன்று அப்பாவாகவும் தெரிந்தது

நான் தனியாக நின்றிருந்தேன்!!
—————————————————————————–

11
ந்த கடலுக்குத் தெரியும்
நான் பைத்தியம் இல்லையென்று
என் சேலையினை
இந்த கடலின் அலைதான் கிழித்துப்போட்டது!!
—————————————————————————–

12
கடலே உனக்கு வேண்டுமென்றால்
ஒரு பத்து ரூபாய் தரேன்
என் குழந்தையைக் கொடேன்..

இல்லையேல் இந்தா என் ரவிக்கையை தரேன்
நீ போயி…
—————————————————————————–

13
டி இடிக்கும்
படுக்கையை சுருட்டிக்கொண்டு
வீட்டினுள் ஓடுவோம்,

இப்போதும் இடி இடிக்கிறது
படத்தில் பார்க்கும்போதே
காதைமூடிக் கொள்கிறோம்..
—————————————————————————–

14
பூ
கம்பத்தின் போது
என் வீடும் உள்ளே போனது,

என் வீட்டின் கனவுகள்
அந்த பூகம்பத்தைச் சபித்திருக்கும்!!
—————————————————————————–

15
ழை வந்துபோனது
கொசு நிறைய ஆனது
காய்ச்சலும் வந்துபோனது;

வட்டி கட்டவேண்டியது மட்டும்
தீரவில்லை இன்னும்..
—————————————————————————–

16
ழைவந்து மழைவந்து
காய்கிறது
ஏழையின் வயிறு;

ஏழையின் வயிற்றிலேறி
மிதித்துச் செல்கின்றன; சில
பணக்கார மிருகங்கள்..
—————————————————————————–

17
ரத்தை வெட்டும்போதேல்லாம்
கீழே சாய்கிறது
மனிதம்;

மனிதன் மரத்தோடுச் சேர்த்து
மறைமுகமாய் தன்னையும் எரிக்கிறான்..
—————————————————————————–

18
டி இடிக்கிறது
பனைமரங்கள் கருகுவதில்லை
இடியை மரத்தோடு வெட்டியிருந்தோம்;

இயற்கை மரத்தின்வழி முடியத் துவங்கியது!!
—————————————————————————–

19
பூ
கம்பத்தில் அறுந்தது
சில தொப்புள் கொடியும்
சில தாலிகளும்..

பூகம்பம் மீண்டும் வரும்
தாலிகளும் அறும்
உபயம்; நீயும் நானும்..
—————————————————————————–

20
பூ
பூத்தது
உதிர்ந்தது
அது வாழ்ந்ததன் குறிப்பு நம்மிடமில்லை;

நம்மைநினைத்து தலைகுனிந்துக் கொள்கின்றன
மலர்கள்..
—————————————————————————–

21
கு
ளிருக்கு கோணியைப் போர்த்தி
மூடிக்கொண்ட சிறுவனால்
மழையை மூடமுடியவில்லை;

மழை; ஓட்டையின் வழியே
மரணமாகவும் சொட்டியது..
—————————————————————————–

22
வெ
ய்யிலில்
விறகு வெட்டினோம்,

மழையில் நனைகிறது அடுப்பும்
அடிவயிற்றுப் பசியும்
மனிதனின் சுயனலத்தனமும்..

—————————————————————————–

23
சி கழிப்பிடத்தில் சூடில்லை
சல்லி உடைக்குமிடத்தில்
வெற்றுடம்பைச் சுட்டது சூரியன்;

ஏற்றத்தாழ்வுகளை எப்படிக் களைவது ?

ஏசியை கழிப்பறையிலேனும் நிறுத்திக் கொள்
அல்லது
வெற்றுடம்பை மனிதத்தால் மூடு!

—————————————————————————–

24
ள்ளங்கையைக் குவித்து
மழைநீர் சேமிக்கிறது குழந்தை
காய்ச்சல் வருமென்று
கன்னத்தில் அரைகிறாள் அம்மா;

ஐயோ பாவமென்று
மழையை நிறுத்திக் கொள்கிறார் கடவுள்;

இன்னொரு கன்னத்தையும் காட்டி
அடித்தால் பரவாயில்லை – ஆனால்
மழை கண்டிப்பாக வேண்டுமென்கிறது குழந்தை..

பயந்துப்போனார் கடவுள்; கண்ணீர்
மழையாகக் கொட்ட
மீண்டும் கைநீட்டியது குழந்தை மழையில்!
—————————————————————————–

25
பி
ணங்கள் என்று சொல்லி
ஒன்றாகச் சேர்த்தே தூக்கிவந்தனர்
புயலில் சிக்கி இறந்தப்பின்
கோமணம் கட்டியிருந்தவனையும் கோட்டுசூட்டு போட்டவனையும்..

ஆனால் அதற்குமுன்னரே அவர்கள்
தங்களைத் துண்டுபோட்டுக்கொள்ள
கத்தியை –
ஜாதியிலும் மதத்திலும் இனத்திலும்
ஏன் பணத்தில் கூட செய்துவிட்டிருந்தனர்..
—————————————————————————–
வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வெள்ளைப் பொங்கலும் வாழ்வின் சந்தோச நாட்களும்..

வெள்ளை வெள்ளையாய் பற்கள் சிரிக்கும்
வானத்து நட்சத்திரமாய் பானையும் மினுக்கும்
மஞ்சள்கொத்து மங்களம் சேர்க்கும் – மண்மணக்கும்
சர்க்கரையாய் வெண்பொங்கல் இனிக்கும்;

பெண்போற்றும் மண்போற்றும் தமிழருக்குத்
திருநாளு; மண்ணாண்ட மன்னவர்கள் மண்ணளந்த
நன்னாளு, வலியோர் சிறியோர்க்கு கொடையளித்த
ஒருநாளு, தை பிறந்தா வழிபிறக்கும் நம்பிக்கையின் முதன் நாளு;

மண்பிசைந்த கைகளுக்கு பானையினால் சோறாச்சி; கற்பூரம்
குங்குமம் விற்கும் பாய்க்கு மதமிரண்டு சமமாச்சி, மாயிலைத்
தோரணமும் குருத்தோலைப் பின்னலும் வாழையிலையும்
புத்தாடை வாங்க ஏழைக்கும் பணமாச்சி; பொங்கலொன்றே
எல்லோர்க்கும் பாகுபாடில்லா பெருநாளாச்சி;

ஊரெங்கும் திரிந்தாலும் பொங்கலுன்னு வீடுவந்தோம்
நாலுநாள் பண்டிகையை நாடெங்கும் கொண்டாடுவோம்
ஆடுமாடு வீடு வயல் அத்தனைக்கும் நன்றி சொல்வோம்
கனுக்கரும்பு இனிப்போட தைநாளில் கூடிநிற்போம்;

தமிழரது மரபாய போகியெனும் பண்டிகை போதும்
பழையன கழியும்நாளில் புதியன புகுமொரு ஜாலம்
தைய்யதில் ஆடை வேய்ந்து பளிச்சென வீடும் பேசும்
பொன்னோர் அன்று கண்ட பொங்கலெங்கள் பொன்னாளே!!

உறவுகள் அனைவருக்கும் மனதிற்கினிய பொங்கல் திருநாட்களின் நல்வாழ்த்துக்களும் அன்பும்!!

வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தின் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக்குத் திருமண வாழ்த்து..

உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!!

பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம்
மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம்
பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும்
பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்;

யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க
வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும்
வெற்றி வெற்றியென அணிவகுக்க
ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த வா பொன்னுலகே..

மழையின் ஈர மனம் முழுதும்
மணக்கும் சந்தன வாசமென – இனிக்கும்
வாழ்வின் ரசம் பரவி – துடிக்கும்
இதயம் இரண்டிற்கும் வாழ்த்துக் கூற வா பொன்னுலகே..

உழைக்கும் வர்கத்து வியர்வைப் போல்
மதிப்பில் உயரும் பண்பு வளர
கட்டும் மனைவியின் கண்களிரண்டில் – அக்கறை
ஒளிரும் ஜோதி கூட்ட ஓடோடி வா பொன்னுலகே..

கூடும் சொந்தம் தோழமையின் – நாடுங்
கண்ணியம் காத்திடவே – வீட்டிலிருந்தே
வாழ்வதனை வெளி யதுகற்கும் பாடத்தை
பாட்டில் ஏற்றும் சந்தம்போல் வாழ்விலேற்ற வா பொன்னுலகே..

பட்டினி வயிற்றை பாசம் நிறைக்கும்
பாட்டிக்குக் கூட பரவசத்தில் பல்முளைக்கும்
விரிக்கும் இறக்கை இரண்டிற்கும் குமர ஆசைததும்பும்
இளமை இரவின் வெளிச்சத்தில் புதிய வானம் தேடும்

பொங்கலிட்ட பானைபோல் வீடு
மங்களம் கட்டும், மனத் தரிசு நிலத்தில்
வாழ்வின் புதிர்கள் குழந்தைகளாய்ப் பிறக்கும்
பொக்கைவாய் சாமிவந்து – சக்கைபோடு போட

புது வாழ்க்கை பொலிவோடு அமையும்,
நீடுநலமோடு வாழ; வளம் பல சேர;
நம் வாழ்த்துக்களும் முழுமையாய் நிறையும், வாழ்த்த வா
பொன்னுலகே..
———————————————————————
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்)

மூப்பில்லா தமிழுக்கும்
முடிவில்லா தமிழோசைக்கூட்டத்தின் தலைமைக்கும்
கவிவீச்சுள்ள தோழமை உறவுக்கும்
எம் பேச்சிற்கு செவிசாய்க்கும் அவைப் பொறுமைக்கும்
என் மதிப்பு கூடும் முதல்வணக்கம்..

கை தட்டப் பறக்கும் உள்ளங்கை தூசாக
கவலைகள் பரந்து மனசு தமிழால் லேசாகும்
நட்பால் நெருங்கநெருங்க அகவேற்றுமை யதுஇல்லாக் காசாகும்
சொக்குப்பொடிபோட்டு மயக்கும்தமிழுக்கு ஒற்றுமைஒன்றே மூச்சாகும் – இம்

முதல்வெள்ளியின் தருணம் மகிழ்ச்சிக்கு மகத்தானது; தமிழின்
தீஞ்சுவை அறியத் தோதானது எனச் சொல்லி –
அதற்கான நன்றியை இன்றும் தமிழோசையை தாழாது தாங்கிநிற்கும்
என் நட்புறவுகளுக்கு நல்கி –

இந்தப் புதுவருடம் எல்லோருக்குமான நிறைவைத் தந்து
உயிர்கள் அனைத்திற்கும் நலத்தைச் சேர்க்கும் அரிய வருடமாய் அமைவதற்கான வாழ்த்தையும் வேண்டுதலையும் முன்வைத்து என் கவிதைக்குள் வருகிறேன்..

பணிவில் உயர்ந்து பண்பில் சிறந்து
தமிழதுசிறக்க கவிதையில் மணத்து
கண்கள் பணிக்கும் அன்பில் அணைத்து
மனசெல்லாம் முழு சகோதரத்துவத்தோடு நிறையும் –
கவியரங்கத் தலைமைக்கு –
ஐயா திரு. சாதிக்பாஷா அவர்களின் தமிழ்பற்றிற்குத் தலைவணங்கி –

எனது தலைப்பை முன்வைக்கிறேன் “இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்”

கோபம் நறுக்கி குழம்பு வையி; குணம் சேர்த்து
கூட்டு பண்ணு; கழுவுற தட்டுல மனசைக் காட்டு
தின்னுற சோத்துல அன்பை ஊத்தி, திண்ண திண்ண பறிமாறு
திகட்டாத – கோயில்’ வீடு!

கிள்ளி விளையாடு, துள்ளி ஓடி பாடு
அள்ள அள்ளக் குறையாத சந்தோசந் தேடு
கூடும் நிமிசம் ஒவ்வொன்னும் பேறு பேறு’
அட, குடும்பந்தானே வாழ ஜோரு!

குயில் கத்தும், காதில் குழந்தைச் சிரிக்கும்
மனசு அவளை நினைக்கும்; அவள்
மகனைத் தாங்கி’ மகளைத் தாங்கி’ உன்னைத் தாங்கி’
மனசெல்லாம் சுமப்பா, மார்கழிப்பூவா சிரிப்பா; அங்கே
இல்லறம் மணக்கும், நல்லறம் நாடெங்கும் பிறக்கும்!

விளக்கணைத்தாலும் வெளிச்சம் வரும், அவனின்
கால்பட்ட இடமெல்லாம் அவளுக்கு சூரியன் உதிக்கும்
பார்க்கும் பார்வையில் வாழ்க்கை வசப்படும்; நேசிக்கும் மனசுக்கு
அவனின் நகர்தல் எல்லாம் இனிக்கும்; அந்த நேசத்தைச்
சொல்லித் தரவே’ இல்லறத்தின் நாட்கள் தினம் விடியும்!

பேசாத மௌனத்தின் சப்தத்தை மனசிரண்டு கேட்கும்
அப்பா பிள்ளை அன்பில் காதல் தோற்கும், புதிதாக எடுத்த சட்டையில்
வியர்வை மணக்கும்; எழுதா பாசம் இதுவென்று ஒரு
முத்தம் சொல்லும், குத்தும் மீசையின் வலிபோல
தோல்விகளும் இன்பத்திற்கென்றே வலிக்கும்’
வெற்றியின் கதவை வீடு’ தானே திறந்துவைக்கும்!

கடன்வட்டி காற்று போல; சொந்தமும் வலிப்பதுண்டு
ஒரு சொல்லாலே மனசுவெந்து குடும்பமே எரிவதுண்டு’
சோறில்லாத சட்டியில தூக்கமும் தொலைவதுண்டு
நாலுபேருக்கு மத்தியில் கிழிந்த ஆடை காரிஉமிழ்வதுண்டு
கல்லு குத்தும் காலைப்பார்த்து பிய்ந்தசெருப்பும் சிரிப்பதுண்டு
நகைநாட்டு இல்லையேன்னு தாலிக்கயிரும் அழுவதுண்டு

கண்ணீர்த் துளிஊற; காலம் கைகட்டி நிற்காது மனமே
கசப்புமறக்கும் பொழுதுக்குள்ளே
வாழ்க்கை இனிக்கத்துவங்கும் மனமே..

நீர் முகரும் கயிற்றுமுனையில் தலைமாட்டி என்னாகும்?
பிடித்துநிறுத்த வழியுண்டு’ இல்லறத்தில் நல்லறம் சேரு
நல்லறத்தால் நாடு சிறக்க இல்லறங்களே இனிதாய் வாழு!!

வித்யாசாகர்

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..

து ஒரு கண்ணாடி உடையும்போன்ற
மனசு;

எப்படியோ ஆண் பெண்
அவள் அவன்
அது இதுவென்றுச் சொல்லி உடைத்துவிடுவதில்
என்னதானிருக்கோ (?)
ஆனால் –
உடையாமல் பார்த்துக் கொள்ளும் அன்பில் தான்
அவளும் நானுமிருந்தோம்;

தேனீர் தருவாள்
இனிப்பது அவளாகவே இருப்பாள்,
சோறு போடுவாள்
உண்டது தனிச் சுகமாகயிருக்கும்,
தோள் மீது சாய்ந்துகொள்வாள்
சாய்ந்துக் கிடப்பதை நானென்றே உணர்வேன்;

தூக்கம் கலையும்
அருகே வரைந்ததுபோல் கிடப்பாள்,
தூங்கிப்போவேன் ரசித்தே தூக்கம் தொலைப்பாள்
அடடா அடடா வாழ்க்கை இதுவென்று இனிக்கும்
இதுபோலிணையாப் பிற இதயமெண்ணித் துடிக்கும்;

இருப்பது ஒரு வாழ்வு – இதிலெதற்கு
அவளும் அவனும்?
நீயும்  நானுமென சிறகடித்துப் பறப்போம்
ஒரு மனதின் இரு இறக்கை விரிப்போம்
இரவையும் பகலையும் ஏமாறச் செய்வோம்
எவன்வீட்டுச் சொத்து அது; அன்பை
வாரி வாரி நெஞ்சக்கூட்டில் நிறைப்போம்;
—————————————————————————-
வித்யாசாகர்

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்