Tag Archives: மூன்றாம் உலகப் போர்

மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..

ஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்! மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தீராத தீவிரவாதம்..

எது தீவிரவாதம்? எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால் கொலையெனும் மனோபாவம் தீவிரவாதத்தின் முதல் போதனையாகப் பதிகிறது மனதுள் பிற கேள்விகளின்றி.. அப்பா … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)

உன் முகம் தீய்ந்த தீயில் அமிலங்கள் நெஞ்சில் சுரக்கின்றன வாழ்நாளின் பக்கங்கள் கண்ணீரில் கடக்கின்றன; சமூகத்தின் குற்றத்தில் காதலும் கைதானதே – தான் தைத்த நாகரிகச் சட்டையை தன் கையால் கிழித்துப் போட்டதே; கண்ணில் தூசெனில் துடிக்கும் கரங்களிரண்டில் கசங்கிப் போய் வீழ்ந்தவளே இன்று காணாமல் போனதேன்…? காலத்தின் தீர்ப்பில் கலையும் மைவாங்கி வாழ்க்கையை திருத்த … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை)

தமிழ் வணக்கம் அ ஆ’ வில் உயிரூட்டி அமுது தமிழை உரமாக்கி இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே; மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்!! ——————————————————————— அவை வணக்கம் பசிக்கு தமிழ்தந்து படிக்க … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை)

முக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்