Tag Archives: உடைந்த கடவுள்

உடைந்த கடவுள் – 27

கோவிலின் வெளி வாசலில் வரிசையாய் அமர்ந்திருக்கிறார்கள் ஒவ்வொருவர் தட்டிலும் சோம்பேறித்தனமும் அதை மறைக்கும் கதைகளும் நிரம்பிக் கிடந்தன; வாழ்க்கையை தொலைத்தவர்களும் தொலைப்பவர்களும் ஒரு வேலை சோற்றிற்காய் கை ஏந்தி அமர்ந்திருந்தார்கள். நன்றி மறந்த மானுடத்தால் அவதியுறும் மனித தெய்வங்கள் அப்பா அம்மா எனும் அன்பை நினைவிலிருந்தே அகற்றி விட்டு அரைகாசு கால் காசிற்குமாய் வயோதிகம் கடந்து … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 26

கோவிலில் நிறைய உண்டியல்கள் இருந்தது; எதிலும் பணத்தை போட விழையவில்லை நான், வெளியே வருகையில் கிழிந்த கால்சட்டையும் என்னை ஒழுகிய தலையுமான ஒரு சிறுவனை அவசரமாக பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போனார் அவரின் தாய். அவரை அழைத்து இதில் இவ்வளவு பணம் உள்ளது குழந்தைக்கு நல்ல கால்சட்டை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தேன்; கோவிலில் மணி … Continue reading

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

25 சில அப்பாக்கள் உறங்குவதில்லை..

ஒரு ஜாமின்ரி பாக்சும் பத்து நோட்டும் ஆறு புத்தகமும் ஒரு அரிச்சுவடியும் வாய்ப்பாடும் வாங்கித் தந்தார் என் அப்பா. நான் படித்து பட்டதாரியாகி ஒரு அரசு வேலையில் கூட சேர்ந்துவிட்டேன்; என் பிள்ளைக்கு கணினியும் போக்குவரத்து கட்டணமும் மாதமொருமுறை ரொக்க பணமும் போகவர செலவுக்கும் புதிது புதியதாய் ஆடைகளும் வயதுக்கு காதலும் கொடுத்து படிக்க வைக்கையில் … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 24

தங்கத்தில் தொங்கட்டான் வைரத்தில் மூக்குத்தி பத்து சவரத்தில் தாலி சரடு வெள்ளியில் சொம்பும் குத்துவிளக்கும் பித்தளையில் அண்டாவும் வாலியும் போதா குறைக்கு – மாப்பிள்ளைக்கு வண்டியும் ஒரு லட்சம் ரொக்கமும் கொடுத்து திருமணம் செய்து வைத்த அப்பாவின் வட்டிப் பணத்தை – கணவனுக்கு சொல்லாமல் அழும் கண்ணீரால் கட்டிட முடிவதில்லை தான்; என்னால்!! —————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 23

மூச்சுப் பிடித்து கேட்டு வாங்கிய வரதச்சனை பொருட்கள் வெறுமனே பரணையில் தூசியுற்றுக் கிடந்தது; அண்ணாவின் கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை அந்த தூசிகளுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் தெரிந்தாவிடும்?!! —————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக