Tag Archives: உடைந்த கடவுள்

உடைந்த கடவுள் -22

குழந்தையோடு தாய்வீடு சென்றிருதேன் ஒரு நாள் மட்டும் குழந்தையை விட்டுவிட்டு போடி என்றாள் அம்மா, ஐயோ ஒருநாளா குழந்தையை விட்டுட்டு ஒருநொடி கூட இருக்க முடியாது; உயிரே போய்விடும் என்றார் அவர். அம்மா நமுட்டாக சிரித்தாள், காலத்தின் நீதியும் அம்மாவின் சிரிப்பும் எனக்குப் புரிந்தது; அவருக்கு புரியவில்லை!! —————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 20

கனவுகள் விற்றே கவிதைகளை வாங்குவார்களாம்; நான் உறக்கத்தையே கேட்காததால் – கனவுகளை வாங்க துணிவதில்லை!! ——————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 19

மணித்துளிகளை உடைத்து உள்புகுந்துக் கொள்கிறது கவிதை; புரியவும் அர்த்தப்படவுமே நாட்களும் – வருடங்களும் தேவை படலாம்! ———————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 18

நகம்கடித்து துப்புவதாகவே எண்ணிக் கொள்கிறார்கள் நிறையபேர் – பிறரின் உணர்வுகளை; உணர்வுகள் கண்ணீராய் ஊறி காய்ந்துவிடுவதாகவே எண்ணம் அவர்களுக்கு. பிறரின் மன வடுக்கள் பிறருக்கு – முழுதாக தெரிவதேயில்லை! —————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 17

மனதை அறுத்தும் கெடுத்தும் திருத்தவும் செய்யும் நிறைய விசயங்களை சொல்லித் தருகிறோம் சினிமாவிற்கு ; சினிமா அதையே திருப்பி நமக்கு சொல்லிக் கொடுத்து நம் சந்ததிக்கும் விட்டு செல்கிறது – மனதை அறுக்கும் குடுக்கும் விசயங்களை!! ——————————————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக