Tag Archives: உடைந்த கடவுள்

உடைந்த கடவுள் – 13

ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி; எல்லாமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ஆடைகள்; இரண்டு வாங்கினால் ஒன்று இனாமாக தரப் படும்; வேறெங்குமே கிடைத்திடாத தரம்; இப்படியெல்லாம் ஏமாற்றித் தான் விலைபோகிறது – ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்!! ————————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

10 உடைந்த கடவுள்!!

சந்து பொந்துகளிலெல்லாம் வீழ்கிறது மனிதம்; எந்த புள்ளியில் பிறர் மன்னிக்கப் படுகின்றனரோ அந்த புள்ளியிலிருந்தே மனிதம் வீழாதிருக்கலாம்; வீழ்ந்தும் போகலாம்! ————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

9 உடைந்த கடவுள்!!

வட்டிக்கு பணம் வாங்கி வட்டிக்கு பணம் வாங்கி உடைகிறது சேமிக்கும் மனப்பான்மை; இல்லாமலே போகிறது மனசாட்சி!! ——————————

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

8 உடைந்த கடவுள்!!

எங்கெங்கோ யார் யாரோ பேசிக் கொள்கிறார்கள் – அவன் சரியில்லை அது செய்தது உலகமே அப்படித் தான் என்றெல்லாம்; நான் இப்படித்தானென்று ஒத்துக் கொள்ள – யாருக்குமே துணிவில்லை!! ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

7 உடைந்த கடவுள்!!

சுட்டெரிக்கும் சமுகத்தில் சுயமாக – எல்லோரும் சிந்திக்காதலில் ஒவ்வொன்றாய் நிகழ்கிறது கொலைகள்; மதமென்றும் ஜாதியென்றும்.. இனமென்றும் பணமென்றும்.. உறவேண்டும் காதலென்றும்.. கடவுளென்றும் கூட!!! —————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக