Tag Archives: உலகம்

அரைகுடத்தின் நீரலைகள் – 2

போர்வீரர்கள் யாருமே சாகாதவர்கள் நமக்காக உயிர்தியாகம் செய்து நம்மோடு – வாழ்பவர்கள் என்பதை ஒத்துக் கொள்ளும் நாம் எப்படியோ எதிரி நாட்டின் வீரர்களை மட்டும் கொண்று விட்டதாகவே சொல்லி வெற்றிக் கொடி ஏற்றுகிறோம்! கொடியில் தெரியாத ஒரு உயிர் வண்ணங்களுக்கிடையே கலந்து இறந்த எல்லோரையுமே நினைவில் கொண்டுக் கொள்கிறது!! ——————————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள்.. (1)

எவனெவனோ கேட்டானாம் லஞ்சம் கொடுத்தது நீயும் நானும் செய்த வஞ்சம், ஊரெல்லாம் நடக்கிறது கொள்ளை வீட்டில் சேர்த்த சுயநலத்தின் தொல்லை, காலமெல்லாம் பரிதவிக்கிறான் மனிதன் மனிதம் மறக்கப் பட்ட இரும்பன், உலகெல்லாம் கொட்டிக் கிடக்கிறது வாழ்க்கை எதற்கெல்லாமோ அஞ்சித் தவிக்கிறது மனசு, செய்யாத கொடுமைக்கு இல்லை தண்டனை செய்த தவறிலிருந்து இல்லை தப்பித்தலும், உடம்பெல்லாம் ஆசையும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

36 சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை!

ஆதிக்க நெருப்பு தின்ற அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற நாள்காட்டியின் சாபமிந்த மறக்கமுடியா – கருப்பு ஜூலை! மனிதக் – கருப்பு மனத்தின் கொலைவெறி முற்றி முற்றும்; முடியாதோரையே அழித்த வரலாற்றுக் கொடுமை – கருப்பு ஜூலை! சுயநல வெறி சிகப்பாய் ஓடி தாமிரபரணியின் உடம்பெல்லாம் பிணங்களாய் மிதந்து – மனிதமின்மையை மனிதனே நிரூபித்த; … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 34

வாழ்க்கை வெங்காயம் போல் என்றார் யாரோ; உரிக்க உரிக்க கண்ணீராம். உரிபடுவதேயில்லை இப்போதெல்லாம் நிறைய பேரின் வாழ்க்கை; வெங்காயம் என்று வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில் கண்ணீர் மட்டும் மிட்சம் போல். என்னை கேட்டால் வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள் உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள் வாழுங்கள் என்பேன்!! ———————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 33

நிறைய வீடுகளில் நிறைய அறைகள் புழக்கமின்றியே கிடக்கிறது; வீடற்று இருப்பவர்களை பற்றி அந்த அறைகளுக்கு எந்த கவலைகளும் இல்லை, தெருவில் உண்டு உறங்கி புணர்ந்து தலைமுறைகளை கடக்கும் ஒரு சாமானியனின் தேவை நான்கு சுவர் மட்டுமே என அந்த – வெற்றுக் கட்டிடமான கல் மண் கலவைகளுக்குப் புரிவதேயில்லை! ————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக