Tag Archives: ஐக்கூ

ஞானமடா நீயெனக்கு – 63

ஒவ்வொரு பெற்ற வயிறும் வளர்த்த தோளும் தன் குழந்தைக்கான அன்பையும் ஆசைகளையும் எழுதிவைக்க நாட்குறிப்பினை தேடுவதில்லை; தேடி வைத்திருந்தால் – ஒவ்வொரு வீட்டிலும் ஞானமடா நீயெனக்கும் – ஞானமடி நீயெனக்கும் – நிறைய கனத்திருக்கும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 62

உன் நெடுந்தூர பயணத்தில் உனை போல் ஒரு பூ – உன் வீட்டிலும் பூக்கும்; அன்று – அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில் ஒன்றிலாவது நிறைந்திருக்கும் – நானுனக்கு கொடுக்கும் நிறைய முத்தங்களின் அன்பு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

61 குழந்தைகள் காணும் உலகம் புதிது; கவனம் கொள்க!!

அடுப்பு எரிகிறது.. நான் வெளியே கூவிச் சென்ற கீரைகாரரிடம் கீரை வாங்க வாசல் நோக்கி போகிறேன் நீ அடுப்பினை பார்க்கிறாய்.. அடுப்பில் நெருப்பு சிவப்பாக கனன்று எரிகிறது உனக்கு நெருப்பு அதிபுதிது முதன் முதலாக இன்றுதான் அடுப்பின் சிவந்த – நெருப்புத் துண்டுகளை பார்க்கிறாய், நெருப்பு சிவக்க சிவக்க – நெருப்பின் மேல் உனக்கு ஆசை … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

அன்பு வணக்கம் நட்புறவுகளே.., அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!! பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

38 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே!!!!

முதன் முதலாய் ஒரு வெளிச்சம் கண்டேன் இதுவரை கண்டிராத சந்தோசத்தின் வெளிச்சம் கண்டேன் முதன் முதலாய் அவள் பூக்கக் கண்டேன் எனக்காய் எனக்காகவே இன்று பூக்கக் கண்டேன் முதன் முதலாய் அவள் சிரிப்பை கண்டேன் எனை பார்த்து சிரித்த தனிச் சிரிப்பை கண்டேன் முதன் முதலாய் அவள் வெட்கம் கண்டேன் தரையில் கால்கள் கோலமிடாது விழிகள் … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்