Tag Archives: ஐக்கூ

37 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே!!!!

அவளெனக்கு எழுதிய எந்த கடிதத்திலுமே என்னை காதலிப்பதாக சொல்லவில்லை நானும் நிறைய கடிதமெழுதியதுண்டு வரிக்கு வரி காதலாகவே கரைந்ததுண்டு கடைசி வரை அவள் காதலிப்பதாக சொல்லவேயில்லை நானும் வற்புறுத்தியதில்லை இன்று எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் அந்த அவளெழுதிய கடிதங்களை எடுத்துப் பார்த்துக் கொள்வதுண்டு ஒருவேளை அவளும் என்னை காதலித்திருக்கக் கூடும்!! ———————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அருமை கவிஞர் தி. தமிழினியனின் கவிதைகள்..

ஆசை ஆதி மனிதர்களாய் இருக்க ஆசை; ஆடையற்றவர்களாய் அல்ல ஜாதியற்றவர்களாய்! —————————————— காதல் அருகில் நீயிருந்தால் அகிலத்தையே மறக்கிறேன்; அகன்று நீ சென்றால் அக்கணமே உயிர்துடிக்கிறேன்! —————————————— காதலிக்காக.. மீரா – கண்ணனுக்காக காத்திருந்தாள் கையில் வீணையோடு; உனக்காகவே காத்திருக்கிறேன் இதயம் முழுதும் நான், காதலோடு! —————————————— கல்லறை பூக்கள் பெண்கள் பூக்கள் தான் மண்மீது … Continue reading →

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 25

ஒரு மனிதன் பிறக்கையில் பிறக்கிறது மரணமும் மனிதனோடு வளர்கிறது மரணமும் மரணத்தை கொன்று கொன்று வென்று விட்டதாய் எண்ணும் நாளில் மரணம் மனிதனை நெருங்குவதை மனிதன் அறிவதுமில்லை, மனிதன் அடங்குவதுமில்லை! ————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 24

மனிதம் வளர்கத் தானே கடவுள் கல்லாகவோ அல்லது கல்லில் கடவுளோ அல்லது கல்லின்றியோ கூட கடவுள் கற்பிக்கப் பட்டது? மனிதன் தான் பாவம் மனிதனை கொன்றாவது கடவுளை காப்பதாக எண்ணி கொவில்களைமட்டுமே காக்கிறான், அவனின் காப்பகத்தில் சேமிக்கப் படுகின்றன கொவிலால் கொள்ளப் பட்ட உயிர்கள். கடவுள், உடைந்த கோவிலின் வெளியே நின்று மனிதனை தேடி அலைவார் … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 23

ஒரு உயிரொழுக பூக்கிறது அன்பு; இல்லாத மனசிலிருந்து. மனசெனில்’ அறிவு தாண்டி ஆத்மா நிறையுமிடமோ தெரியவில்லை. நான் கேட்டது கிடைத்த சிரிப்பைவிட வேண்டியதை இழந்த துக்கத்தில் – மனசை அடையாளாம் காணாமல், உடம்பெல்லாம் எரியும் வேதனை தீயில் மனசெங்கோ அன்பின் குவியலாக இருப்பதாகத் தான் தெரிகிறது; எனக்குள்ளும்! ஒரு பார்வையில் பரிதவித்து முத்தத்தில் நிறைந்து பிரிவில் … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக