Tag Archives: ஐக்கூ

உடைந்த கடவுள் – 19

மணித்துளிகளை உடைத்து உள்புகுந்துக் கொள்கிறது கவிதை; புரியவும் அர்த்தப்படவுமே நாட்களும் – வருடங்களும் தேவை படலாம்! ———————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 18

நகம்கடித்து துப்புவதாகவே எண்ணிக் கொள்கிறார்கள் நிறையபேர் – பிறரின் உணர்வுகளை; உணர்வுகள் கண்ணீராய் ஊறி காய்ந்துவிடுவதாகவே எண்ணம் அவர்களுக்கு. பிறரின் மன வடுக்கள் பிறருக்கு – முழுதாக தெரிவதேயில்லை! —————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 17

மனதை அறுத்தும் கெடுத்தும் திருத்தவும் செய்யும் நிறைய விசயங்களை சொல்லித் தருகிறோம் சினிமாவிற்கு ; சினிமா அதையே திருப்பி நமக்கு சொல்லிக் கொடுத்து நம் சந்ததிக்கும் விட்டு செல்கிறது – மனதை அறுக்கும் குடுக்கும் விசயங்களை!! ——————————————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 16

ஐம்பது ரூபாய் கொடுத்து குடிப்பவன் கூட ஐந்து ரூபாய் கொடுத்து இட்டிலி சாப்பிட – மறுத்து ஏழை என்கிறான். இட்டிலி பணக்காரத் தனம் எனில் – ஐம்பது ரூபாய் விஸ்கி? கேள்வி கேட்கவில்லை எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம் பயன்படலில், படுத்துதலில் விழுந்தது போல் – ஏற்றத்தாழ்வு விரிசல்களும் வெற்றுமை கோடுகள்! —————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 15

செய்கூலி இல்லை சேதாரம் இல்லை பத்து சவரன் வாங்கினால் ஒரு கிராம் இலவசம்; எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே பார்க்க முடிந்தது – தெருவில் பிளாஸ்டிக் வளையல் விற்ற ஏழை பெண்ணிற்கு!! ————————————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக