Tag Archives: ஐக்கூ

உடைந்த கடவுள் – 14

மூச்சுமுட்ட சோறு தின்று விடும் ஏப்பத்திற்கு தெரிவதில்லை பத்து நாள் பட்டினியின் கொடுமை; பத்து பைசா தட்டில் போட்டுவிட்டால் போதும் ஏப்பத்தின் சப்தம் – எல்லோருக்கும்கேட்கலாம்!! ————————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 12

ஒரு ‘கிலோ’ கத்தரிக்காய் இரண்டு ரூபாய்; இரண்டு ‘கிலோ’ உப்பு ஒரு ரூபாய்; ஒரு ‘கிலோ’ பருப்பு பத்து ரூபாய்; பத்து ‘கிலோ’ அரிசி நானூறு ரூபாய் – என்று கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும் வாங்குவோருக்கும் – ‘கிலோ’ தமிழ் என்றே தெரியப் பட்டுள்ளது! ————————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

எழுத எழுத இசையானாய்.. எழுதாமலே கவியானாய்.. உயிரென்று சொல்லி உறவானாய்.. உறவில் – காதல் நட்பு தாண்டி ஏதேனும் ஒன்று புனிதாமாகுமெனில் – அதுவாக கரைவோம் வா!! ——————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

34 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

என் மொத்த உணர்வின் வெப்பத்தில் – மொழியை பூத்தவளே.. வா.. உன் தனிமையை விரட்டி தாகமொழிப்போம், சுடும் நெருப்பில் ஊற்றிய நீர் போல ஒரு சின்ன சிரிப்பில் கலப்பில் – புன்னகையாய் மலர்வோம் வா.. ————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

33 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

உறக்கத்தை துளைத்தேனடி உண்பதும் மறந்தேனடி பித்தனாய் அலைந்தேனடி – உனை நினைப்பதொன்றையே ரசித்தேனடி; உன் நினைவுகளின் ஈரத்தில் இதயம் நனைந்தேனடி உன் இமையின் அசைவில் தொலைந்தேனடி; உன் உடம்பின் வளைவுகளில் வீழ்ந்தேனடி பின் ஒரேயொரு புன்னகையில் உயிர்த்தேனடி; வார்த்தைகளில் காதலை வடித்தேனடி காதலை சொல்ல கூட கவிதையாக மட்டுமே கறைந்தேனடி! ——————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்