Tag Archives: கணவன்

80) அவள் கொடுத்த தேநீரில்; முத்தமும்! முத்தமும்!!

1 நீ கொடுக்கும் தேநீரில் எனக்காக சர்க்கரை சேர்ப்பியா அல்லது இரண்டு முத்தத்தை இடுவாயா? சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு தேனிரிலும் – எனக்குள்ளும்!! ————————————————————————— 2 வாழ்வின் நகர்வுகளை எனக்காக சுமப்பவள் நீ என்று புரிகையில் – உன் மீதான அன்பே வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்!! ————————————————————————— 3 காலத்திற்குமான ஒரு சக்கரத்தில் – … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “கணவன்..”

தந்தையை பாடினால் தரணியில் உயர்வு என்றும், உருப்படியாக நான் உங்கள்முன் நிற்பதற்கு அவர் எடுபுடி ஆனாரென்றும்’ தந்தையின் அருமையினை நம் நெஞ்சமுருக பாடிச் சென்ற ஐயா சாதிக் பாட்சா அவர்களுக்கு நன்றியரிவித்து அடுத்த கவியரங்க தலைப்பான ‘கணவனுக்கான’ கவிதைக்கு செல்வோம்! ———————————————————————————————— சற்றே கண்மூடிய கோழி தூக்கம், மாத சம்பளம் வந்தாலும் வராவிட்டாலும் தொல்லை, ஊரிலிருந்தாலும் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(83) பிரிவுக்குப் பின் – நிறைவுறுகிறது!

உடம்பெல்லாம் நரைத்து சிரித்த ரோமங்களுக்கிடையே – வலித்துக் கொண்டன – உன்னோடில்லாத அந்த தனித்த நாட்களெல்லாம்; ஊரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன – நாம் பிரிந்து தவித்த அந்த விசும்பலின் சப்தங்களெல்லாம்; நெருப்பில் சிவந்து தகித்த அனலாய் எரியுதடி – உன்னோடில்லாத நாட்களின் இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய நம் இளமையும் … Continue reading →

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 82

இன்று எனக்குப் பிறந்தநாள், புது துணியுடுத்தி எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து தொலைபேசியில் எல்லோரிடமும் வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில் கண்களின் ஓரம் – ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது; தூக்கம் கலைவதற்குள் நீ வந்து என் காதுகளில் கிசுகிசுக்காத பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 81

தொலைபேசியில் பேசும்போது – ஏதோ நீ பேச வந்ததை பாதியில் நிறுத்தினாய்; நாம் கடந்த இரவுகளின் மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்; தயவுசெய்து – கடிதத்தில் கூட அவைகளை எழுதிவிடாதே, இன்னும் – ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க எனக்கு பலமில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக