Tag Archives: கவிதைகள்

(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!

காலையில் எழுந்து காற்றை உள்ளிழுக்கையில் – உள் புகுகிறாய் நீயும், அண்ணாந்து வானம் பார்க்கையில் வெளிச்சமாய் பார்வையுள் நுழைகிறாய் நீயும், நுகரும் முதல் வாசத்தில் நீ என்னை கடந்த பொது உணர்ந்த வாசம் இன்னும் விடுபடாமலே வாசம் கொள்கிறது, யாரோ அழைக்கையில் திரும்பி பார்த்தும் – உனையே தேடுகிறேன் நான்; உணர்தல் செவியுறுதல் எண்ணுதல் பார்த்தல் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

36 விளக்குகளை அணைப்போம்; வெளிச்சத்தை சேமிப்போம்!

  ஒரு சொட்டு மின்சாரத்தின் விலை இரு சொட்டு வெளிச்சம்.   அல்லது யார் உயிரையோ காக்க போராடும் ஒரு இயந்திரத்தின் –  உயிரில் துளி.   இரு புன்னகை பூக்களின் இடையே பரவும் – வெப்பத்தின் மூலாதாரம்.   உடல் தகிக்கும் உணர்வின் உயிர் தொடும் – அலையில் இடையே கலந்த இயக்கி; ஒரு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

7 சுட்டு எரிந்ததொரு காடு..

யார் மரணமும் யாரையுமே நோகவில்லை  முடிவில் – முள்ளிவாய்க்காலை விழுங்கி சுடுகாடாய் கனத்தது உலக தமிழரின்; கல்மனசு! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6 சுட்டு எரிந்ததொரு காடு..

போர் போரென கதறிய கத்திய அவலகுரலில்; செவிடாகிப் போயினர் உலகத்தினர், ஊமையாகிப் போயினர் தமிழர்கள்! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

5 சுட்டு எரிந்ததொரு காடு.. (64)

ஆணும் பெண்ணும் குழந்தையுமென – கொன்று குவித்தவனுக்கு பெயர் போர்வீரனும், கொள்ளப் பட்டவனுக்குப் பெயர் தீவிரவாதியுமெனில்,   சொன்னவனை இனி சிங்களனென உரைப்போம்! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக