Tag Archives: கவிதைகள்

பிரிவுக்குப் பின் – 79

எத்தனையோ பூக்களுக்கு மத்தியில் சிரிக்கும் ஏதோ ஒரு அதிசய பூவிலிருந்து தான் துவங்குகிறது அத்தனை ஆண்களின் வாழ்க்கையும்; எனக்கும் நீ அப்படித் தான் – இடையே சற்று பிரிவென்னும் முட்களோடு!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 78

நீயும் நானும் தெருவில் நடக்கையில் – நீ என் கை பிடித்து வருவாய், உள்ளுக்குள்ளே – ஆயிரம் தேவதைகள் கூட நடப்பது போல் உணர்வேன்; இங்கும் நான் தனியே நடக்கையில் நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து என் கை பிடித்துக் இழுக்கிறாய்; நான் திரும்பிப் பார்ப்பேன் – நீ மட்டும் தெரிவதேயில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 77

உன்னை அடைந்தப் பின்னரே இரவின் வெளிச்சங்கள் கூட – ரகசியமாய் புரிந்தது; உன்னை பிரிந்த பின் தானே – பகலில் கூட வாழ்வின் இருள்கள் துளிர்கின்றன! உண்மையில் பகலை தொட்டு அடையாளம் கண்டுகொள்ளும் என்னால் – இரவை தான் நீயின்றி தொடவே முடிவதில்லை; ஆயினும் – இப்போதெல்லாம் இருபத்தி நான்கு மணிநேர இருட்டில் தான் வாழ்கிறேன் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 76

உன் – கால் கொலுசும்.. கை வளையல்களும்.. சொல்லிடாத – சேதி கேட்டும்; சொன்ன – இரவுகளை நினைத்தும் தான் நகர்கிறது – வாழ்வினிந்த – அர்த்தமற்ற நாட்கள்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே- 18 அல்ல; மொத்த தமிழருக்கான தீர்வு இது!!

மண் மலை காற்று ஆகாயம் கடல் எங்கிலும் யாரவது மனிதர்கள் இருக்கிறீர்களா??? வருத்தப் படாதீர்கள். இது உங்களை புண்படுத்துவதற்கான கேள்வியல்ல. மனிதம் என்பதை மீறிய நிறைய நாட்களுக்குப் பின் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாமெல்லோரும். அருகே துடிப்பவனை பார்த்து கருணை கொள்ளாத மனசு, எங்கோ துன்புறும் சக உறவை எண்ணி பதறாத உயிர்ப்பு, தன்னால் இயன்றதை … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , | 32 பின்னூட்டங்கள்