Tag Archives: வித்யாசாகர் கட்டுரை

உண்மையின் வெளிச்சமேந்து..

உயிர்கள் போகையில் பசியைப் பற்றி பேசுவது கூட தர்மமல்ல; மக்கள் மாண்டுகொண்டிருக்கிறார்கள் அதற்கு கூடி ஏதேனும் செய்ய இயலுமெனில் செய்வோம், அதைவிடுத்து வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துமோதலிட்டு இருக்கும் ஒற்றுமைத் தன்மையையும் இழந்துவிடவேண்டாம் உறவுகளே.. வரும் எந்த தகவலையும் நாம் நன்னெஞ்சோடு பகிர்கிறோம், எனவே அது நம் முழு சொத்தோ முழு பொருப்பிற்கிணங்கி நம் பிள்ளையோயாகிவிடாது. எனவே … Continue reading →

Posted in அறிவிப்பு, கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!!

மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே. தவறுகள் எல்லோரிடத்திலும் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

நிம்மதி; கிலோ நாலு ரூபாய்!!

அது ஒரு மலையடிவாரப் பகுதி. அங்கு ஒரு செல்வந்தர் மகிழுந்தில் வந்து இறங்கினார். சுற்றி நாங்குப் புறமும் பார்த்தார். மலையினை நோக்கி பார்த்தார். சற்று தள்ளி ஒரு வயதானவர் ஒருவர் காவி உடையில் நின்றிருக்க அவரிடம் சென்று – “ஏங்க இங்க ஒரு பிக்குளி சாமியார் இருப்பாராமே அவரைப் பார்க்க முடியுமா?” “ஏன் முடியாது, தாராளமா … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வளைகுடாவிலிருந்து; அன்புள்ள அம்மாவிற்கு மகனெழுதும் கடிதம்!!

அன்புள்ள அம்மாவிற்கு, வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா? அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா. நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம். நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம். இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நானும் என் எழுத்தும் – வித்யாசாகர் (10.08.2010)

அன்புள்ளங்களுக்கு வணக்கம்.., என் வலிக்காமல் நடந்த பாதை இதோ இந்த இணைப்பிற்குள் இருப்பதை சொடுக்கிப் பாருங்கள்

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக