Tag Archives: கவிதைகள்

மேதினம் விடுமுறைக்கான நாளல்ல தோழர்களே!!

நாளெல்லாம் வெய்யிலில் ஐஸ்வண்டி தள்ளுபவனுக்கோ, தெருவோரம் அமர்ந்து உச்சி பிளந்து ஒரு கத்தை கீரை வாங்கக் கூவி கூவி விற்கும் வயதான தள்ளாத கிழவிக்கோ, பத்துபாத்திரம் தேய்த்து தேய்த்து கையில் ரேகை மறைந்து போன என் குடிசை வீட்டு சகோதரிக்கோ, ஊரெல்லாம் சுற்றி கால் வீங்கிய காய்கறி காரனுக்கோ.. கையெல்லாம் காரத்தால் வெந்துபோன சுண்ணாம்பு அடிப்பவனுக்கோ.. … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 70

காற்றினை – கிழித்துக் கொண்டு வந்து என்னை தொடும் உன் கண்ணீருக்குத் தெரிவதில்லை; உன் அழுகையில் அதிகம் வலிப்பது என் இதயம் தானென்று!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 69

இதயம் – வலிக்கிறதென்பதே தெரியாமல் தான் நீ கடந்துக் கொண்டிருக்கிறாய் என்னை; கடை தூரம் சென்று திரும்பிப் பார்க்கையில் -ஒருவேளை நான் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 68

வாழ்க்கையில் உணரும் ஆயிரம் – அர்த்தங்களுக்கு இடையில் மனம் எங்கோ.. யாரையோ.. எதற்கோ… தேடிக் கொண்டு தான் இருக்கிறது; நீ- மட்டும் தான் அடிக்கடி – இடையே வந்து என் தேடலின் அர்த்தத்தை நீயென்றுரைக்கிறாய்!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 67

உன் – ஈரமில்லா SMS முத்தத்தில் தான் நனைந்து நகர்கிறது என் – சிரிப்பினை மறந்த வெளிநாட்டு வாழ்க்கை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக