Tag Archives: கவிதைகள்

93 வாழ்க்கையை படி!

எத்தனையோ ஆனந்தாக்கள் – நம்மை சீர்குலைத்து பாடம் புகட்டுகிறார்கள்; நிறைய வங்கி கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வாங்கிக் கொண்டு நமக்குக் – கொஞ்சம் தருகிறது; வேளைக்கு சம்பளமும் வாங்கிக் கொண்டு – வேலையையும் முழுதாக செய்யாமல் மேலே லஞ்சமும் வாங்கி பின்பும் நாலுமுறை இழுக்கடித்து செய்து எவனோ கால் மேல் கால் போட்டு அமர்கிறான். இதெல்லாம் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

94 வாழ்க்கையை படி!

காற்றையும் நீரையும் வெளிச்சத்தையும் விலையாக்கிக் கொண்டு விலை கொடுத்து வாங்க ஓடும் – உழைக்கும் – வஞ்சினம் கொல்லும் நம்மை காற்றும் நீரும் வெளிச்சமும் பார்த்து சிரிக்காமலா இருக்கும்??

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

95 வாழ்க்கையை படி!

நல்லவர் கெட்டவருக்கு இடையே தவறை திருத்திக் கொள்ளுமளவே இடைவெளி; திருந்தாதவருக்கும் சாமானியருக்கும் நல்லவன் கெட்டவன் என்பதே – உலகின் அளவுகோல்!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

96 வாழ்க்கையை படி!

எத்தனை முறை அடித்தாலும் – மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறது குழந்தை; பிறகு வளர்கையில் பாதி திருந்தியும் பாதியை தனக்குள் மறைத்தும் கொண்டதில் – நல்லவர்களாகி விடுகிறோம் நாமெல்லாம்!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

137 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

அதிவேக சாலையில் திடீரென – குறுக்கே வந்த வாகனம் கண்டு தற்காலிகமாக அழுத்திய வேகத்தடையில் – வண்டி நின்றுவிட்டாலும், இதயம் – சுக்குநூறாக உடைந்து படபடக்கிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக