Tag Archives: கவிதை

பணம் தின்னி; பட்டுப் புடவை (6)

பட்டுப் புழுவின் உயிரில் நெய்த ஆபரண ஆடை! ஆயிரம் லட்சம் உயிர்களை கொன்ற கொலை வியாபாரம்! என் ஏழை சகோதரிக்கு என்றுமே கிடைக்காத கனவு அவதாரம்! என் தாயை கொள்ளியில் வைத்த பிறகும் எரிந்திடாத பட்டுப் புடவை! ———————————- வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

வட்டியும் கிட்டியும் (5)

பணம் பணம்னு அலைந்ததுல பொணம் தின்னும் பொழப்பு பாரு; கந்து வட்டி கிந்து வட்டின்னு ஏழை ரத்தம் இனிக்கும் பாரு! சுட்ட உடம்பில் சூடு போடும் – மிருக குணம் தொழிலு பாரு; வாரமானா வந்து நிற்கும் மாடி வீட்டு மைனர் பாரு! கூரை – பிய்த்து பிய்த்து எறிந்ததுல – வீட்ட; உசத்தி கட்டி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

சித்தனும் பித்தனும் இயற்கை (4)

பிரபஞ்சத்தின் நிர்வானத்திற்கு பசுமையில் கட்டிய பட்டாடை; மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை! ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம் உலகை அள்ளிப் பருகிடாத கொடை; சுடும் நெருப்பு – சுட்டெரிக்கும் சூரியன் கடும் பல நட்சத்திரச்ங்களை தாண்டி பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை; ஆலகால விசமும் பூக்கும் அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும் இடையே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

ஆட்காட்டி; நாட்காட்டி (3)

சுவற்றில் ஆணியடித்த மூடர்களின் கடவுள்; நல்லநேரம் கெட்டநேரம் என்றெல்லாம் சொல்லி விளம்பரத்திற்காய் – வீடு வரும் பித்தன்; ராகுகாலம் எமகண்டமென்று ஏமாற்றும் சமூக சீர்கேடர்களின் கைக்கூலி; காசுவாங்கிக் கொண்டு அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் கால துரோகி! நாட்களின் நகர்தலை அளந்து காட்டுவதாலும் – நாளொரு தகவல் கொண்டு இயங்குவதாலும் மட்டுமே – பணம் கொடுத்து வாங்கிவரும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

மேகப் பூக்களின் விளம்பரப் பலகை – வானவில்

ஏழு வண்ணத்தில் எண்ணிக் கோர்த்து ஏழைகள் பார்வை உடுத்தும் – பட்டாடை; வானவில்! வளைந்த புருவத்தில் பூமிக் காதலிக்கு வானம் காட்டும் வர்ண ஜாலம்; வானவில்! கல்வியறிவை கடன் வாங்காது இயற்கை நெய்த கணினி வித்தை; வானவில்! ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த வான தேவதையின் வண்ண மாலை; வானவில்! காற்றில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்